உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




124

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

6. பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனாகிய தென்னவன் மூவேந்த வேளான்:

ம்

இவன் சோழ மண்டலத்தில் இராசேந்திர சிங்க வளநாட்டின் உள்நாடுகளுள் ஒன்றாகிய பொய்கை நாட்டின் தலைவன்; இராசராச சோழன் தஞ்சை மாநகரில் எடுப்பித்த பெரிய கோயிலில் இவ்வேந்தன் ஆணையின்படி ஸ்ரீகாரியஞ் செய்து வந்தவன்; சிவபெரு மானிடத்தில் சிறந்த பக்தியுடையவன். இவன், இராச ராசேச்சுரத்தில் திருஞானசம்பந்த அடிகள் திருநாவுக்கரைய தேவர், நம்பியாரூரர், நங்கை பரவையார், மெய்ப்பொருள் நாயனார், சிறுத்தொண்ட நாயனார் என்போர்க்குச் செப்புப் படிமங்கள் எழுந்தருளுவித்து அவற்றிற்கு அணிகலன்களும் அளித்துள்ளனன்'. இச்செயல், இவன் சமய குரவர்களிடத்தும் சிவனடியார்களிடத்தும் வைத்திருந்த பேரன்பினை நன்கு புலப்படுத்துவதாகும். அன்றியும், சிவனடியார்களுள் மெய்ப் பொருள் நாயனார்க்கும் சிறுத்தொண்ட நாயனார்க்கும் இவன் பெரிய கோயிலில் படிமங்கள் எழுந்தருளுவித்தமைக்குக் காரணம் அவ்விருவருஞ் செய்த செயற்கருஞ் செயல்கள் இவன் உள்ளத்தைப் பிணித்தமையேயாம். மெய்ப்பொருள் நாயனாரது படிமத்தை வைத்த செய்தியைக் கூறும் கல்வெட்டில் அவ்வடியாரது பெயரைக் கூறாமல் 'தத்தா நமரே காண் என்ற மலாடுடையார்' என்று இவன் குறிப்பிட்டிருப்பது அவர்பால் இவனது உள்ளத்தில் கிளர்ந்தெழுந்த அன்பின் முதிர்ச்சியை இனிது உணர்த்துவதாகும்'. இவன் தன் அரசனிடத்தும் பேரன்புடையவன் என்பது தஞ்சைப் பெரிய கோயிலில் இராசராச சோழன் உலோகமாதேவி ஆகிய

ருவர் படிமங்களும் எழுந்தருளுவித்து அவற்றிற்கு அணிகலன் களும் கொடுத்திருப்பதனால் நன்கு விளங்கும். இவன் கி. பி. 995-ஆம் ஆண்டில் திருச்சோற்றுத்துறைக் கோயிலில் நாள்தோறும் தேவாரப் பதிகம் பாடுவோர்க்கு நிவந்தமாகப்

1. S. I. I., Vol. II, Nos. 38, 40 and 43.

2. பாதாதிகேசாந்தம் இருபதிற்றுவிரல் உசரத்து இரண்டு கையுடையராகக் கனமாகச் செய்த தத்தாநமரேகாண் என்ற மிலாடுடையார் ஒருவர் (2) இவர் நின்ற........... பீடம் ‘ஒன்று’

- (S. I. I., Vol. II, No. 40)

3. S. I. I., Vol. II, No. 38.