உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

125

பொன் அளித்துள்ளனன்'. ஆகவே, இவன் தன் வாழ்நாளில் சிவனடியார்களிடத்தும் அரசனிடத்தும் ஒப்பற்ற அன்பு பூண்டு ஒழுகியவன் என்பது ஒருதலை. இராசராசசோழன் இவனது சிறந்த பண்புகளை யுணர்ந்துதான் இராசராசேச்சுரத்தில் ஸ்ரீகாரியஞ் செய்யும் வேலையில் இவனை அமர்த்தினன் போலும். 7.பாளூர் கிழவன் அரவணையான் மாலரிகேசவன்:

இவன் இராசராசன் காலத்திலிருந்த அரசியல் அதிகாரி களுள் ஒருவன்; பாண்டி நாட்டுத் திருக்கானப்பேர்க் கூற்றத்துப் பாளூ ரின் தலைவன்; இராசராசேச்சுரத்தில் ஸ்ரீகாரியக் கண்காணி நாயகமாக இருந்தவன்'.

8. இராசகேசரிநல்லூர் கிழவன் காறாயில் எடுத்த பாதம்:

இவன் இராசராச சோழன்பால் திருமந்திர ஓலை எழுதும் ஓர் அதிகாரியாயிருந்தவன். ஸ்ரீ இராஜராஜ தேவர்க்குத் திருமந்திர ஓலை யெழுதும் அருமொழி தேவ வளநாட்டு இங்கண் நாட்டு இராஜகேசரி நல்லூர் கிழவன் காறாயில் எடுத்த பாதம்' என்ற கல்வெட்டுப் பகுதியினால் இவன் நாடும் ஊரும் பேரும் மேற்கொண்டிருந்த அலுவலும் அறியற்பாலவாம். 9. வேளான் உத்தம சோழனாகிய மதுராந்தக மூவேந்தவளான்:

இவன் அருமொழிதேவ வளநாட்டு நென்மலி நாட்டுப் பருத்திக்குடியிலிருந்த ஒரு தலைவன்; இராசராச சோழனிடத்தில் திருமந்திர ஓலை நாயகமாக இருந்தவன். இவன் பெயர் ஆனை மங்கலச் செப்பேடுகளில் காணப்படுகிறது. இவன் மதுராந்தக மூவேந்த வேளான் என்ற அரசாங்கப் பட்டம் பெற்றவன்.

10. விளத்தூர் கிழவன் அமுதன் தீர்த்தகரன்:

வன் நித்த விநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்து விளத்தூரினன்; ராசராச சோழனிடத்தில் திருமந்திர ஓலை

1. S.I.I, Vol. V, No. 611.

2. ‘உடையார் சீராஜராஜேசுவரம் உடையார்க்குச் சீகாரியக் கண்காணி நாயகஞ் செய்கின்ற பாண்டிநாடான இராஜராஜ மண்டலத்துத் திருக்கானப் பேர்க்கூற்றத்துப் பாளூர் பாளூர் கிழவன் அரவணையான் மாலரிகேசவன்' (S. I. I., Vol.II, No. 36).

3.S.I.I., Vol. II, No. 27.

4. Ep. Ind., Vol, XXII, No. 34.