உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




146

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

இராசேந்திரனது வடநாட்டுப் படையெடுப்பிற் கலந்து கொண்ட படைத்தலைவர்கள் பலராதல் வேண்டும். அவர்கள் இன்னார் இன்னார் என்பதை இப்பொழுதுள்ள கல்வெட்டுக் களையும் செப்பேடுகளையுங்கொண்டு அறிய முடியவில்லை. எனினும் இவ்வேந்தனுடைய படைத் தலைவர்களுள் மிகச் சிறப்புற்று விளங்கிய விக்கிரம சோழச் சோழிய வரையனான இராசராசன் என்பான் தலைமைச் சேனாபதியாகச் சென்றிருக்க வேண்டும் என்பது ஒருவாறு புலப்படுகின்றது. அன்றியும் இராசேந்திரனுடைய மூத்த மகனும் இளவரசுப் பட்டம் பெற்றவனுமாகிய முதல் இராசாதிராச சோழன் இப்போரில் படையுடன் சென்று வெற்றிதேடித் தந்திருத்தல் வேண்டும் என்பது,

- வங்கத்தை

முற்று முரணடக்கி மும்மடிபோய்க் கல்யாணி செற்ற தணியாண்மைச் சேவகனும்'

என்ற தொடரில் இவ்வேந்தனது போர்ச்செயலை ஒட்டக்கூத்தர் விரித்துரைத்திருத்தலால் நன்கு விளங்கும்.

அப்படையெடுப்பின் பயனாகத் தமிழர் நாகரிகம் வங்காள நாட்டில் புகுந்தது என்று ஐயமின்றிக் கூறலாம். படையுடன் சென்ற தமிழ் நாட்டுத் தலைவர்களுள் ஒருவன் மேல் வங்காளத்தில் தங்கி விட்டனன் என்றும் அவன் வழியில் வந்த சாமந்த சேனன் என்பவனே பிற்காலத்தில் வங்காளத்தில் ஆட்சி புரிந்த சேன மரபினரின் முதல்வன் என்றும் திரு. R. D. பானர்ஜி என்னும் அறிஞர் கூறுகின்றனர்.' மிதிலையை யாண்ட கருநாடரும் அவ்வாறு சென்றவர்களாக இருத்தல் வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். திரிலோசன சிவாசாரியாரது சித்தாந்த சாரா வளியின் உரையில் இராசேந்திர சோழன் கங்கைக் கரையிலிருந்து பல சைவர்களை அழைத்து வந்து காஞ்சி மாநகரிலும் சோழ நாட்டிலும்

1. விக்கிரம சோழனுலா, வரிகள் 36-38.

2. Palas of Bengal, pp. 73 and 99.

3. The Cholas, Vol. I, p. 254 (First Edition).