உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




148

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

ம்

வ்வேந்தன், தன்னுடைய சிறந்த கப்பற்படையின் துணை கொண்டு, கடல் நடுவிலுள்ள கடாரத்தரசனாகிய சங்கிராம விசயோத்துங்கவர்மனைப் போரிற் புறங் கண்டு அவனது பட்டத்து யானையையும் பெரும் பொருளையும் வித்தியாதரத் தோரணத்தையும் கவர்ந்துகொண்டு ஸ்ரீவிசயம், பண்ணை, மலையூர், மாயிருடிங்கம், இலங்காசோகம், பப்பாளம், இலிம்பங்கம், வளைப்பந்தூர், தக்கோலம், தமாலிங்கம் இலாமுரி தேசம், நக்கவாரம், கடாரம் ஆகிய இடங்களையும் கைப்பற்றினன் என்பது இவன் மெய்க்கீர்த்தி யினால் அறியப்படுகிறது. அவற்றுள், கடாரம் என்பது ‘பரக்கு மோதக் கடாரம்' எனவும், 'குளிறு தெண்டிரைக் குரை கடாரம்" எனவும் கலிங்கத்துப்பரணியில் கூறப்பட்டிருத் தலால் அது கடற்கரையில் அமைந்திருந்த ஒரு நகரம் என்பது வெளியாகின்றது. செப்பேடுகளில் வரையப்பெற்றுள்ள வடமொழிப் பகுதியில் அது கடாகம்" என்று குறிக்கப் பட்டுள்ளது. பத்துப்பாட்டுள் ஒன்றாகிய பட்டினப் பாலையில் சொல்லப் படும் காழகம்' எனப்படுவது கடாரமேயாம் என்பது அதற் குரைகண்ட நச்சினார்க்கினியர் கருத்து. அவ்வாசிரியர் தக்க ஆதாரமின்றி அங்ஙனம் கூறார் என்பது ஒருதலை. ஆகவே, கடைச்சங்க காலத்தில் காழகம் என்று வழங்கிய கடாரத்துடன் தமிழ் நாட்டார் வாணிகத் தொடர்புடையவராய் வாழ்ந்து வந்தனர் என்பது பட்டினப்பாலை உரையால் நன்கு புலப்படு கின்றது. அதனோடு சீன தேயத்தினரும் அந்நாளில் வாணிகஞ் செய்து வந்தனர் என்பது அந்நாட்டு வரலாற்றுக் குறிப்புகளால் அறியப் படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த கடாரம் மலேயாவின் மேல் கரையில் தென்பக்கத்தில் கெடா என்னும் பெயருடைய நகரமாக இக்காலத்திலிருத்தல் அறியத்தக்கது.

1. இவன் சூளாமணிவர்மனுக்குப் பேரனும் மாரவிசயோத் துங்கவர்மனுக்குப் புதல்வனும் ஆவன்.

2. கலிங்கத்துப்பரணி, பா. 138.

3. மேற்படி பா. 189.

4. Ep. Ind., Vol. XXII, No. 34.

5. பட்டினப்பாலை, வரி 191.

6. Ep. Ind., Vol. XXII, page 282.