உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

149

ஸ்ரீவிசயம் என்பது சுமத்ரா என்று இக்காலத்தில் வழங்கும் சொர்ண தீவத்திலுள்ள பாலம்பாங் என்னும் இராச்சியமாகும்'. அது கி. பி. எட்டாம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரையில் சிறந்து விளங்கியதோடு தமிழகத்துடன் வாணிகத் தொடர்பு கொண்டும் நிலவியது. அதனைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைச் சீன தேயத்து நூல்களில் மிகுதியாகக் காணலாம்.

பண்ணை என்பது சுமத்ரா தீவின் கீழ்கரையில் உள்ள ஊராகும்.2 அஃது இந்நாளில் பனி, பனை (Pani or Panei) என்று வழங்கப்படுகிறது.

மலையூர் என்பது சுமத்ராவின் கீழ்கரையில் இருந்தது என்று ஒருசாராரும் மேல்கரையில் இருந்தது என்று மற்றொரு சாராரும் மலேயாவின் தென்பகுதியில் இருந்தது என்று பிறிதொரு சாராரும் கூறுகின்றனர். எனவே, அஃது எங்கிருந்தது என்பது தெளிவாகப் புலப்படவில்லை. ஆனால் அந் நாட்டில் தான் மலையூ என்னும் ஆறு ஓடியது என்பது ஆராய்ச்சியாளர் களின் கருத்து. அது பாலம்பாங் இராச்சியத்திற் கண்மையில் இருந்திருத்தல் வேண்டும் என்று சிலர் கருதுகின்றனர். ஹாலண்டு தேயத்தினரான ஓர் ஆராய்ச்சியாளர் அது ஜம்பி (Jambi) என்னும் நாடாகும் என்று உறுதி செய்துள்ளனர்.

3

மாயிருடிங்கம் என்பது மலேயாவின் நடுவில் இருந்ததாம். சீன தேயத்தினர் அதனை ஜிலோடிங் (Ji - lo - ting) என்று வழங்கி யுள்ளனர்".

இலங்கா சோகம் என்பது மலேயாவிலுள்ள கெடாவிற்குத் தெற்கே இருந்தது என்று தெரிகிறது. அது சீன தேயத்தினரால் 'லிங் - யா - சென் - கியா' (Ling - ya - ssenkia) என்று வழங்கப் பட்டுள்ளது'.

1. The Cholas, Vol. I, p. 259.

2. Ibid.

3. The Cholas, Vol. I. p, 262. Foot Note.

4. Ibid, p. 623.

5. Ibid, p. 260.

6. The Cholas, Vol. I, p. 260.