உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




150

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

பப்பாளம் என்பது பப்பாளமா என்று மகாவம்சத்தில் குறிக்கப்பட்டுள்ளது. பப்பளம் என்ற நாடு ஒன்று முற்காலத்தில் இருந்தது என்பது குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழில் 'மாளுவம் சோனகம் பப்பளம்" என்று ஒட்டக்கூத்தர் கூறிய வாற்றான் நன்கறியக்கிடக்கின்றது. எனவே, பப்பாளம் என்பது தான் அவ்வாசிரியரால் பப்பளம் என்று கூறப்பட்டிருத்தல் வேண்டும். சிங்கள வேந்தனாகிய முதற் பராக்கிரமபாகுவின் ஆணையின்படி அருமண தேயத்தின்மீது கி.பி. 1165-ல் படையெடுத்துச் சென்ற ஆதிச்சன் என்னும் படைத்தலைவன், பப்பாளத்தில்தான் முதலில் இறங்கினான் என்று மகாவம்சம் கூறுகின்றது. எனவே, அது 'கிரா' என்னும் பூசந்திக்கு (Isthmus of Kra) அணித்தாக இருந்திருத்தல் வேண்டும் என்பது ஆராய்ச்சி யாளர்கள் கண்ட முடிபாகும்.* இலிம்பங்கம், வளைப்பந்தூர் என்னும் ரண்டும் எவ்விடங்களில் இருந்தன என்பது

இப்போது புலப்படவில்லை.

தக்கோலம் என்பது கிரேக்க ஆசிரியரான தாலமியால் ‘தகோலா' என்று குறிக்கப்பட்டுள்ளது. அகில் வகைகளில் அருமணவன், தக்கோலி, கிடாரவன் என்பன, சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லாரால் கூறப்பட்டுள்ளன. அவற்றுள், தக்கோலி என்பது தக்கோலத்திலிருந்து நம் தமிழ் நாட்டிற்கு அக்காலத்தில் இறக்குமதி செய்யப்பெற்ற அகில் என்று கருதப்படுகிறது. எனவே, அவ்வூர் நம் தமிழகத்தோடு வாணிகத் தொடர்புடையதாய்ப் பண்டைக் காலத்தில் விளங்கியது என்பது திண்ணம். கிரா பூசந்திக்குத் தெற்கே மலேயாவின் மேல் கரையிலுள்ள தகோபா ஜில்லாவின் தலைநகராகிய தகோபா நகரமே (Takuapa) பழைய தக்கோலம் என்பது அறிஞர்கள் கருத்து".

.

தமாலிங்கம் என்பது சீன தேயத்து நூல்களில் தன்மாலிங் (Tan - ma - ling) என்று சொல்லப்பட்டிருக்கின்றது. அது - மலேயாவின்

1.

குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ், பா. 77.

2. The Cholas, Vol. I, p. 261.

3. சிலப்பதிகாரம் (மூன்றாம் பதிப்பு) பா. 378.

4. The Cholas, Vol. I. p. 262.