உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

151

கீழ்கரையில் குவாண்டன் (Kwantan) என்னும் ஆறு கடலோடு கலக்குமிடத்திலுள்ள தெமிலிங் (Temiling) என்னும் நகரமாகும்'. அதனைத் தெம்பெலிங் என்று வழங்குவதும் உண்டு. தமாலிங்கத்திலிருந்து இலங்கா சோகத்திற்குச் செல்வதற்குத் தரைவழி யொன்று இருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அன்றியும், கடல் வழியாகச் சென்றால் ஓரிடத்தி லிருந்து மற்றோரிடத்திற்கு ஆறு நாட்களில் செல்லலாம் என்பது அன்னோர் கருத்து.

இலாமுரி தேசம் என்பது சுமத்ராவின் வடபகுதியிலிருந்த நாடாகும். அதனை இத்தாலிய யாத்திரிகரான மார்க்கோ போலோ என்பார் லம்பிரி (Lambri) எனவும் அராபியர்கள் லாமுரி (Lamuri) எனவும் கூறியுள்ளனர். சீன தேயத்தினர், அதனை லான்வூலி (Lan - wou - li) என்று வழங்கியுள்ளனர்.

நக்கவாரம் என்பது நிக்கோபார் (Nicbar Islands) தீவுகள் என்று இக்காலத்தில் வழங்குகின்றது. அதில் அடங்கிய அத்தீவுகள் வங்காளக்கடலில் உள்ளன. தென்னைகளுள் ஒருவகைக்கு நக்கவாரம்பிள்ளை என்னும் பெயர் இன்றும் வழங்குகிறது.

ஆகவே, கடாரப் படையெடுப்பில் நம் இராசேந்திரன் கைப்பற்றியனவாக மெய்க்கீர்த்தியில் சொல்லப்படும் நாடு களும் ஊர்களும் சுமத்ராவிலும் மலேயாவிலும் அவற்றைச் சூழ்ந்தும் இருந்தனவாதல் வேண்டும். அவைகள் எல்லாம் சுமத்ராவில் அக்காலத்தில் நிலைபெற்றிருந்த ஸ்ரீவிசயராச்சியத் திற்கு உட்பட்டிருந்தன என்பது திண்ணம். கடாரப் படை யெழுச்சியைப் பற்றிக் கூறும் இராசேந்திரன் மெய்க்கீர்த்தியைக் கூர்ந்து நோக்குமிடத்து, அங்கே இவன் எய்திய வெற்றிகள் அனைத்தும் ஒரே படை யெடுப்பில் பெற்றவை என்பதும் அதில் குறிப்பிடப்பெற்ற நாடுகளும் ஊர்களும் ஓர் அரசன் ஆளுகைக்கே உட்பட்டிருந்தன என்பதும் நன்கு புலனாகின்றன. ஸ்ரீவிசய ராச்சியத்திற்கு உட்பட்டிருந்தவையாகச் சீன தேயத்து நூல்களில் கூறப்பட்டுள்ள இடங்களும் ம் இராசேந்திரன் கடாரப்

1. The Cholas, Vol. I. p. 262.

.

2. Ibid Vol. I, p. 263.