உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




152

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 படையெடுப்பில் கைப்பற்றியனவாக மெய்க்கீர்த்தியில் குறிக்கப் பெற்றுள்ள இடங்களும் பெரும்பாலும் ஒத்திருத்தல் ஈண்டு உணரற்பாலது.

நம் இராசேந்திரன் ஆட்சிக் காலத்தில் எத்தனையோ போர்கள் நிகழ்த்தி வெற்றிபெற்றுள்ளானெனினும் இவன் கங்கையும் கடாரமும் கொண்டமைதாம் அக்காலத்தில் மக்கள் மனத்தையும் புலவர் உள்ளத்தையும் ஒருங்கே பிணித்துள்ளன. அவ்வெற்றிச் சிறப்பினை,

களிறு கங்கைநீ ருண்ண மண்ணையில் காய்சினத் தொடே கலவு செம்பியன் குளிறு தெண்டிரைக் குரைக டாரமுங்

கொண்டு மண்டலங் குடையுள் வைத்ததும்'

என்று ஆசிரியர் சயங்கொண்டார் தம் கலிங்கத்துப் பரணியில் பாராட்டியிருத்தல் அறியத்தக்கது. அன்றியும், கவிச்சக்கர வர்த்தியாகி ஒட்டக்கூத்தர், தாம் பாடிய

உலாக்களில்,

என்றும்,

தண்டேவிக்

கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு கங்கா புரிபுரந்த கற்பகம்

கங்கா நதியுங் கடாரமுங் கைக்கொண்டு

சிங்கா தனத்திருந்த செம்பியர்கோன்3

இரண்டு

என்றும் அவ்விரு வீரச்செயல்கள் பற்றியே நம் இராசேந்திரனைப் புகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாம். அவ்வருஞ் செயல்கள் பற்றி இராசேந்திரனுக்குக் கங்கை கொண்ட சோழன், கடாரங் காண்டான் என்னுஞ் சிறப்புப் பெயர்கள் அந்நாளில் வழங்கிய செய்தியும் கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது.

1. கலிங்கத்துப்பரணி, பா. 189.

2. விக்கிரமசோழன் உலா, வரிகள் 34 - 36.

-

3. குலோத்துங்க சோழன் உலா, வரிகள் 49 - 50.