உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

153

னி, இராசேந்திர சோழன் மெய்க்கீர்த்தியை நோக்கு மிடத்து, இவனது கடார வெற்றியோடு இவன் போர்ச் செயல்கள் எல்லாம் ஒருவாறு முடிவெய்தின என்று கூறலாம். ஆனால், இவன் மகன் முதல் இராசாதிராசன் மெய்க்கீர்த்தியை' ஆராயுங்கால், இராசேந்திரன் கடாரம் வென்ற பிறகு இவனது ஆட்சியின் பிற்பகுதியில் மலை நாடு, ஈழ நாடு, மேலைச்சளுக்கிய நாடு என்பவற்றோடு மீண்டும் போர் நிகழ்த்த வேண்டிய இன்றியமை யாமை ஏற்பட்டது என்பதும் அக்காலத்தில் இளவரசனாயிருந்த இராசாதிராசன் அப்போர்களை நடத்தி வெற்றி எய்தினான் என்பதும் நன்கு புலப்படுகின்றன. அப்போர் நிகழ்ச்சிகளில் நம் இராசேந்திரன் நேரில் கலந்து கொள்ளாமல் தன் புதல்வர்களைப் பெரும்படைகளுடன் அந்நாடுகளுக்கு அனுப்பிவிட்டுத் தலைநகரில்தான் தங்கியிருந்தனனாதல் வேண்டும். ஆகவே, இராசேந்திர சோழன் ஆட்சியின் பிற்பகுதியில் நடைபெற்ற போர் நிகழ்ச்சிகளை இவன் மகன் இராசாதிராசன் மெய்க்கீர்த்தியின் துணைகொண்டு ஆராய்வது பொருத்த முடையதாகும்.

பாண்டி நாடும் சேர நாடும் இராசேந்திரன் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன என்பதும் அவற்றை இவன் புதல்வர்களுள் ஒருவன் சோழ பாண்டியன் என்னுஞ் சிறப்புப் பெயருடன் மதுரை மாநகரில் இருந்து கொண்டு ஆட்சிபுரிந்து வந்தனன் என்பதும் முன்னர் விளக்கப்பட்டன. அந்நிலையில் தம் நாடு களைக் கைப்பற்றித் தாமே ஆட்சி புரியவேண்டும் என்ற எண்ணமுடையவர்களாய்த் தக்க காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பாண்டியர் மூவரும் உள்நாட்டில் கலகஞ் செய்யத் தொடங்கினர். அதனை யுணர்ந்த இளவரசனாகிய இராசாதிராசன் பெரும்படையுடன் பாண்டி நாட்டிற்குச் சென்று போர்புரிந்து பாண்டி வேந்தர்களான மானா பரணனையும் வீரகேரளனையுங் கொன்றமையோடு சுந்தர பாண்டியன் போர்க்களத்தில் எல்லாவற்றையும் இழந்து தலை விரித்தோடி முல்லையூர் புகுந்து ஒளிக்குமாறும் செய்தனன்'.

1. S. I. I., Vol. IV, No. 867.

Ibid, Vol. VIII, No. 675. Ibid, Vol. V, No. 633.

2.S. I. I., Vol. IV, No. 867.