உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




154

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -3

அந்நிகழ்ச்சிகள் எவ்வாண்டில் நடைபெற்றன என்பது தெரிய வில்லை. அச் செய்திகளை யுணர்த்தும் பாண்டியர் கல்வெட்டு களாதல் சோழ பாண்டியர் கல்வெட்டுக்களாதல் பாண்டி நாட்டில் காணப்படாமையானும் இராசாதிராசன் மெய்க் கீர்த்தி யொன்றே அவற்றைக் கூறுவதாலும் அப்போர் நிகழ்ச்சி களைத் தெளிவாக அறிய இயலவில்லை. எனினும், சோழர் களைப் பாண்டி நாட்டைவிட்டுத் துரத்துவதற்குப் பாண்டியர் மூவரும் செய்த முயற்சி இவ்வாறு முடிவெய்தியது எனலாம்.

பின்னர், சேரர்கள் சுயேச்சை பெற்றுத் தனியரசு புரியும் விருப்பத்துடன் தம் நாட்டிலும் கலகம் புரிவாராயினர். அதனை யறிந்த இளவரசனாகிய இராசாதிராசன் சேர நாட்டிற்கும் படை யெடுத்துச் செல்வது இன்றியமையாததாயிற்று. அக்காலத்தில் சேரநாடு சில பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வோர் பகுதியும் ஒவ்வொரு அரசனால் ஆளப்பட்டு வந்தது. சேர நாட்டின்மேல் படையெடுத்துச் சென்ற இராசாதிராசன் முதலில் வேணாட்டரச னோடு போர் புரிந்து அவனைக் கொன்றனன்; பிறகு, அவனுக்கு உதவிய கூபக நாட்டு வேந்தனைப் போரில் வென்று அவன் தன் வீரங் குலைந்து புறங் காட்டியோடுமாறு செய்தனன். பின்னர் எலிமலைக்கு அண்மையிலுள்ள இராமகுட நாட்டு மன்னன் ஒருவனோடு போர்புரிந்து வாகை சூடினான். இராமகுட நாட்டு மன்னர்கள் மூஷிக மரபைச் சேர்ந்தவர்கள்; அரச குலத்தினர் எல்லோரையும் கொன்று அழித்த பரசிராமனால் முடிசூட்டப் பெற்ற பெருமை வாய்ந்தவர்கள். கி. பி. பதினொன்றாம் நூற்றாண்டின் இராமகுட மூவர் திருவடியாகிய கண்டன் காரிவர்மன் ஆட்சியின் 59-ஆம் ஆண்டில் வரையப்பட்ட கல்வெட்டொன்று எலிமலைப் பக்கத்தில் காணப்படுகிறது.3

1. S. I. I., Vol. V, No. 633.

2

us.

'வேணாட்டரசைச் சேணாட் டொதுக்கி-கூவகத்தரசைச் சேவகந் தொலைத்து' என்ற மெய்க்கீர்த்திப் பகுதிக்கு 'வேணாட்டரசனைக் கொன்று அவனுக்கு அடங்கி உட்பட்டிருந்த கூவகத்தரசனை விடுவித்து' என்று பொருள் கொள்வது (கூாந ஊடிடயள, ஏடிட. ஐ, யீ. 270) பொருந்தாது. 'வேணாட்டரசனைக் கொன்று கூவகத்தரசனது வீரங்கெடுத்து' என்பதே நேர்மையான பொருள் ஆகும்.

2. Travancore Archaeological Series, Vol. II, pp. 87-113.

3. Ins. 523 of 1930.