உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

155

அதில் இராசேந்திர சோழ சமய சேனாபதி என்பவனைப் பற்றிய செய்தி கூறப்பட்டிருத்தலால் இராசாதிராசன் வென்ற இராமகுட நாட்டு மன்னன் கண்டன் காரிவர்மனே எனல் பொருந்தும். அப்போருக்குப் பிறகு காந்தளூர்ச் சாலையும் இராசாதிராசனால் கைப்பற்றப்பட்டது.

ஆகவே, சோழ பாண்டியன் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற சோழ அரசகுமாரன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பாண்டி நாட்டிலும் சேர நாட்டிலும் இருந்த குறுநில மன்னர்கள் தாம் சுயேச்சை பெறும் பொருட்டுச் சில காலங்களில் கலகங்கள் செய்தனர் என்பதும் அவற்றை அடக்கி அந்நாடுகளில் தன் தம்பியின் ஆட்சி நன்கு நடைபெறுமாறு செய்வதற்கே, இராசாதி ராசன் தன் தந்தையின் ஆட்சியின் பிற்பகுதியில் அவற்றின் மீது யெடுத்துச் சென்றனன் என்பதும் தெற்றெனப் புலப்படுதல்

காண்க.

இனி, ஈழ நாடு முழுவதும் சற்றேறக்குறையப் பத்து ஆண்டுகள் வரையில் இராசேந்திரன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது எனலாம். பிறகு, அதன் தென்கிழக்குப் பகுதியாகிய ரோகண நாட்டை ஐந்தாம் மகிந்தனுடைய புதல்வன் காசிபன் என்பான் கி.பி. 1029-ல் கைப்பற்றிக் கொண்டு விக்கிரமபாகு என்ற பெயருடன் முடிசூடிக் கி. பி. 1041 வரையில் அப்பகுதியை மாத்திரம் அரசாண்டு கொண்டிருந்தான் என்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது. அவன் சோழர்களோடு போர் புரிந்து ஈழ மண்டலம் முழுவதையுங் கைப்பற்றித் தன் ஆட்சியின்கீழ் அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் பெரும் படையைத் திரட்டிக் கொண்டிருந்த காலத்தில் கி. பி. 1041-ல் நோய்வாய்ப்பட்டு இறந்து போனான் என்று மகாவம்சம் கூறுகின்றது. ஆனால், அவன் சோழர்களோடு நிகழ்த்திய போரில் உயிர் துறந்தானென்றும் அவனுடைய முடி முதலான அரசச் சின்னங்கள் இராசாதிராச சோழனால் கைப்பற்றப் பட்டன என்றும் சோழ மன்னர் கல்வெட்டுக்கள் உணர்த்து கின்றன'. அஃது எங்ஙனமாயினும் கி. பி. 1041-ல் விக்கிரமபாகு

1. S. I. I., Vol. IV, No. 539.