உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் -1

159

ஸ்ரீவிஜய ராச்சியத்தையும் அங்கிருந்த சிறந்த கடற்றுறைப் பட்டினமாகிய கடாரத்தையும் இவனது கப்பற்படை சென்று வென்றமைப் பற்றிக் கடாரங் கொண்டான் என்னும் சிறப்பு பெயர் பெற்றனன். இவன் கங்கை கொண்ட சோழன் என்னும் பெயரெய்தியமைக்குக் காரணம் முன் கூறப்பட்டுள்ளது. கிடைத்தற்கரிய அச்சிறப்புப்பெயர் என்றும் நின்று நிலவுமாறு, இவன்தான் புதியதாக அமைத்த தலைநகர்க்குக் கங்கை கொண்ட சோழபுரம் என்று பெயர் வழங்கினன். இச் செயலால் ச் அச்சிறப்புப் பெயரை எத்துணைப் பெருமை வாய்ந்ததாக இவன் கருதியிருத்தல் வேண்டும் என்பது தெள்ளிதின் விளங்கும்.

இவன் அமைத்த அப்பெருநகர் கங்காபுரி என்று கலிங்கத்துப் பரணியிலும்' விக்கிரம சோழன் உலாவிலும்2 கங்கைமாநகர் என்று வீரராசேந்திர சோழன் மெய்க் கீர்த்தியிலும் கங்காபுரம் என்று தண்டியலங்கார மேற்கோள் பாடலிலும் சிறந்த அரணுடைப் பெருநகரமாக அந்நாளில் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.

இத்தகைய பெருமை வாய்ந்த அந்நகர் இந்நாளில் தன் பண்டைச் சிறப்பனைத்தும் இழந்து கும்பகோணத்திற்கு வட கிழக்கில் பத்து மைல் தூரத்திலுள்ள திருப்பனந்தாளுக்கு வடக்கே கொள்ளிடத்திற்குக் கட்டப்பெற்றுள்ள அணையி லிருந்து அரியலூர்க்குச் செல்லும் பெரு வழியில் ஒரு சிற்றூராக உள்ளது. அஃது இக்காலத்தில் திருச்சிராப்பள்ளி ஜில்லா உடையார் பாளையந் தாலுகாவில் இருக்கின்றது. அவ்வூரை ஒரு முறை சென்று பார்ப்பவர்களும் அஃது ஒரு காலத்தில் அரசர்கள் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய திருவுடை நகரமாக

1.

`கங்காபுரியின் மதிற்புறத்துக் கருதார் சிரம்போய் மிகவீழ இங்கே தலையின் வேல் பாய்ந்து இவை மூழைகளாக் கொள்ளீரே' - கலிங்கத்துப் பரணி-களம் பாடியது பா, 91.

2. 'கங்காபுரி புரந்த கற்பகமும்' விக்கிரம சோழன் உலா, வரி 36.

3. 'பெரும்புனற்றனாது கங்கைமாநகர் தைத்தபின்' வீரராசேந்திரன் மெய்க்கீர்த்தி, நுயீ. Ind.

Vol. XXI, No. 38.

4. வண் புயலைக் கீழ்ப்படுத்து வானத் தருமலைந்து மண்குளிரச் சாயல் வளர்க்குமாம் - தண்கவிதைக் கொங்கா ரலங்கல் அன பாயன் குளிர்பொழில் சூழ் கங்காபுரமா ளிகை,-தண்டியலங்காரம், 55 மேற்கோள்