உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




160

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 இருந்தது என்பதை நன்கறியலாம். அந்நகரின் பல பகுதிகள் இப்போது சிற்றூர்களாக அதனைச் சூழ்ந்திருந்த்தலை யாவரும் காணலாம்'. அவற்றின் பெயர்களே அவை முற்காலத்தில் ஒரு மாநகரத்தின் பகுதிகளாயிருந்தவை என்பதை நன்கு புலப் படுத்தும். அவ்வூர்க் கண்மையில் தென்மேற்கே உட்கோட்டை என்னும் ஊர் ஒன்றுளது. அங்கேதான் சோழ மன்னர்களுடைய சோழ கேரளன் முடிகொண்ட சோழன் முதலான அரண்மனைகள் இருந்தன என்பது ஒருதலை”. கங்கைகொண்ட சோழபுரத்தில் இப்போது காணப்படும் கல்வெட்டுகளுள் மிகப் பழமை வாய்ந்தது நம் இராசேந்திரன் புதல்வன் வீரராசேந்திரன் கல்வெட்டேயாம். எனினும், இராசேந்திரன் கல்வெட்டுக் களிலும் அந்நகர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

-

அம்மாநகரின் பழைய நிலையை நினைவு கூர்தற்கும் நம் இராசேந்திரன் பெருமையையுணர்தற்கும் ஏதுவாக இன்றும் அங்கு நிலை பெற்றிருப்பது கங்கை கொண்ட சோழேச்சுரம் என்னுந் திருக்கோயிலேயாகும். அது கங்கைகொண்ட சோழன் எடுப்பித்து வழிபட்டமை பற்றிக் கங்கைகொண்ட சோழேச்சுரம் என்னும் பெயர் எய்துவதாயிற்று. தஞ்சை இராசராசேச்சுரத்தின் மீது பதிகம் பாடியுள்ள கருவூர்த் தேவர் என்னும் பெரியார் இக்கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீதும் ஒரு பதிகம் பாடியுள்ளார். அப்பதிகம் சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் ஒன்றாகிய ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பா என்னும் பகுதியில் உளது. கங்கைகொண்ட சோழேச்சுரம் அமைப்பில் தஞ்சை இராசராசேச்சுரத்தை ஒத்தது எனலாம். ஆனால், உருவத்தில் தஞ்சைக் கோயிலினும் சற்றுச் சிறியது; சிற்பத் திறத்தில் உயர்ந்தது. கர்ப்பக்கிரகம், அதனைச் சூழ்ந்த பிரகாரம், இடிந்த கிழக்குக் கோபுரம் என்பவற்றைத்

1.

4

உட்கோட்டை, மாளிகை மேடு, ஆயிரக்கலம், வாணதரையன் குப்பம், கொல்லாபுரம். வீரசோழ நல்லூர். சுண்ணாம்புக்குழி, குருகை பாலப்பன் கோயில் என்பன கங்கை கொண்ட சோழபுரத்தின் பகுதிகளாக முன்னர் நிலவியவை.

2.S. I. I.,Vo1 II, No. 20; Ins. 102 of 1926; Ins. 182 of 1915. Ins. 510 of 1926.

3. Ins. 61 of 1914. Ins. 203 of 1925.

4. திருவிசைப்பா திருப்பல்லாண்டு (கழகப் பதிப்பு)பக்கங்கள் 59-63.