உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




162

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -3 ரு குன்றுகளு க்

மன்னனாகிய போசனால் வடநாட்டில் கிடையில் அமைக்கப்பெற்ற போசபுரத்து ஏரியினும் சோழ நாட்டில் மலைகளேயில்லாத நிலப்பரப்பில் மிக்க வலிமை வாய்ந்த பெருங் கரைகளுடன் நம் இராசேந்திர சோழனால் அமைக்கப் பெற்ற சோழகங்கம் என்னும் ஏரி சிறப்பும் தொன்மையும் வாய்ந்தது என்பது உணரற்பாலது'. இத்தகைய பேரேரியும் அதற்கணித்தாக அமைந்திருந்த கங்கைகொண்ட சோழபுரம் என்னுந் தலைநகரும் அழிந்து தம் சிறப்பனைத்தையும் இழந்து பாழ்பட்டுக் கிடத்தற்குக் காரணம் பிற வேந்தர்களின் படையெழுச்சியும் அடாச் செயல் களுமேயாகும்.

இனி, இராசேந்திர சோழன் தன் தந்தையைப்போல் சிவநெறியையே தனக்குரிய சமயமாகக் கொண்டவன். இவன் தன் வாழ்நாளில் சிவபெருமானிடத்தில் ஒப்பற்ற பக்தியுடைய வனாய்த் திகழ்ந்தனன் என்பது இவன் தன் தலைநகராகிய கங்கை கொண்ட சோழபுரத்தில் கற்றளியாக எடுப்பித்த ஈடும் எடுப்புமற்ற சிவாலயம் ஒன்றினால் நன்கறியப்படும். இவன், அவ்வாறு சிவபத்திச் செல்வ முடையவனாய் விளங்கியமைக்குக் காரணம், முதற் கண்டராதித்த சோழன் மனைவியார் செம்பியன் மாதேவியாரும் இராசராச சோழன் தமக்கையார் குந்தவைப் பிராட்டியாரும் இவனை இளமையில் வளர்த்து வந்தமையேயாம். ஒருவன் தன் இளமைப் பருவத்தில் எய்திய சிறந்த பயிற்சியும் பண்பும் அவன் வாழ்நாள் முழுமையும் நிலைபெற்றுப் பயன் படும் என்பது யாவரும் அறிந்த உண்மையேயாம்.

இவ்வேந்தன் தன் ஆட்சியின் எட்டாம் ஆண்டாகிய கி. பி. 1019-ல் செம்பியன்மா தேவியாரின் படிமம் ஒன்று செய்வித்து அதனை நாகப்பட்டினந் தாலுகாவில் செம்பியன் மாதேவி என்னும் ஊரிலுள்ள கோயிலில் எழுந்தருளுவித்து அதன் நாள் வழிபாட்டிற்கு நிவந்தம் அளித்துள்ள செயல் ஒன்றே, இவன் சிவபக்தி மிக்க அவ்வம்மையாரிடத்தில் எத்துணை அன்பும் மதிப்பும் வைத்திருந்தான் என்பதை இனிது புலப்படுத்துவதாகும்'.

1. அரசியலார் இவ்வேரியைச் சீர்படுத்தினால் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ள இக்காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் விளைந்து பயன்தரு மென்பது திண்ணம்.

2. Ins. 481 of 1925; M.E.R. for 1926, Page 105.