உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




164

தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 ராச சோழன் ஆவன். அவனுக்குப் பிறகு அவன் தம்பிமார் களாகிய இரண்டாம் இராசேந்திரன், வீரராசேந்திரன் என்போர் முறையே அரசாண்டனர். அம்மூவரும் வேள்வியில் தோன்றும் முத்தீயைப் போல் இராசேந்திர சோழன் புதல்வர்களாகச் சிறந்து விளங்கினர் என்று கன்னியாகுமரிக் கல்வெட்டுக் கூறுகின்றது'. தன் தந்தையின் ஆணையின்படி சேர பாண்டிய நாடுகளுக்கு அரசப் பிரதிநிதியாய் மதுரைமா நகரில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்பவன் இராசேந்திர சோழனுடைய மற்றொரு புதல்வன் ஆவன்.' இராசேந்திரனுக்கு வேறு புதல்வரும் இருந்தனர் என்று சில கல்வெட்டுக்களால் தெரிகிறது. அவ்வரச குமாரர்கள் சில மண்டலங்களுக்குத் தலைவராய் அமர்த்தப் பெற்று அவ்விடங் களில் அரசாண்டுவந்தனர். அரச குமாரரை வென்ற நாடு களுக்குத் தலைவராக அமர்த்தும் புதிய முறையை முதலில் பின்பற்றத் தொடங்கியவன் நம் இராசேந்திர சோழனேயாவன்.

இவனுக்கு இரு பெண்கள் இருந்தனர். அவர்கள் அருண் மொழி நங்கை, அம்மங்கைதேவி என்போர். அருண்மொழி நங்கைக்குப் பிரானார் என்னும் வேறொரு பெயரும் உண்டு. கொள்ளிடத்திற்கு வடகரையில் கண்டராதித்தச் சதுர்வேதி மங்கலத்திற்கு அண்மையிலுள்ள திருமழபாடிக் கோயிலுக்கு

வ்வம்மை சில நிவந்தங்கள் அளித்துள்ளனள்”. மற்றொரு மகளாகிய அம்மங்கைதேவி, கீழைச் சளுக்கிய மன்னனாகிய விமலாதித்தனுக்கும் முதல் இராசராச சோழன் புதல்வியாகிய குந்தவைக்கும் பிறந்த இராசராச நரேந்திரன் என்னும் அரச குமாரனுக்கு மணஞ் செய்து கொடுக்கப்பட்டனள்.* அவ்விரு வர்க்கும் பிறந்த புதல்வனே பிற்காலத்தில் சோழ ராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாக முடிசூட்டப் பெற்று அரசாண்ட பெரு வீரனாகிய முதற் குலோத்துங்க சோழன் என்பது ஈண்டுணரற் பாலதாம்.

1. Travancore Archaeological Series, Vol. III, No. 34, Verse 73.

2. Annual Report on South Indian Epigraphy for 1905. Part II, Para 25.

3. S. I. I., Vol. V, Nos. 644 and 647.

4. முதற் குலோத்துங்க சோழன், பக்கம் 14.