உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

165

இராசேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் குறுநில மன்னர் களாகவும் அரசியலில் பல துறைகளிலும் அதிகாரி களாகவும் இருந்து தம் அரசனது ஆணையின்படி யொழுகி நாட்டிற்குப் பல்லாற்றானுந் தொண்டு புரிந்தோர் பலர் இருந் திருத்தல் வேண்டும். அன்னோருள் சிலர், கல்வெட்டுக்களிலும் செப்பேடு களிலும் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஆயினும், அவர்களைப் பற்றிய செய்திகள் நன்கு புலப்படவில்லை. எனினும், கல்வெட்டுக் களின் துணைகொண்டு அறியப்பெற்ற சிலர் வரலாறுகள் மாத்திரம் ஈண்டு எழுதப்படுகின்றன.

1. விக்கிரம சோழ சோழியவரையனாகிய அரையன் இராசராசன்: இவன் சோழ மண்டலத்தில் திரைமூர் நாட்டிலுள்ள சாத்தமங்கலத்திற் பிறந்தவன்; இராசேந்திர சோழன் படைத் தலைவருள் ஒருவன்; அரசன் ஆணையின் படி மேலைச் சளுக்கிய நாட்டின்மேல் படையெடுத்துச் சென்று வெற்றிமாலை சூடியவன்'; இவன் படையுடன் சென்றபோது அச்செய்தியைக் கேட்ட வேங்கி நாட்டு மன்னன் விசயாதித்தன் என்பான் ஓடியொளிந்தானென்று ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது'. இவன் மேலைச் சளுக்கியரோடும் கீழைச் சளுக்கிய மன்னனாகிய விசயாதித்தனோடும் வங்காள மன்னன் கோவிந்த சந்தன் மகிபாலன் முதலியவர்களோடும் புரிந்த போர்களில் பெரும் புகழ்பெற்று, நால்மடி வீமன், சோழன் சக்கரன், சாமந்தா பரணன், வீரபூஷணம், எதிர்த்தவர்காலன், வயிரி நாராயணன், வீரவீமன் என்னும் பட்டங்களை யுடையவனாய் விளங்கினான். இராசேந்திர சோழன் இவன்பால் எத்துணை மதிப்பு வைத்திருந்தான் என்பது இவன் எய்தியுள்ள பட்டங்களால் நன்கு புலனாகும். இவனைப் பற்றிய செய்தி இராசேந்திரனது ஆட்சியின் பத்தாம் ஆண்டுக் கல்வெட்டில் காணப்படுவதால் இவன் இவ்வேந்தனது ஆளுகையின் முற்பகுதியில் படைத்தலைவனாக நிலவியவனாதல் வேண்டும்.

2. கிருஷ்ணன் இராமனான மும்முடிச்சோழ பிரம மாராயன்: இவன் இராசராச சோழன் ஆணையின்படி தஞ்சைப்

1. Ins. 23 of 1917.

2. Ins. 751 of 1917.