உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




166

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 பெரிய கோயிலின் திருச்சுற்று மாளிகை எடுப்பித்தவன் என்பது முன் கூறப்பட்டுள்ளது. இவன் இராசேந்திரன் ஆட்சியிலும் படைத் தலைவனாக இருந்துள்ளனன்'. கி. பி. 1044-ல் ஒரு கல்வெட்டில் இவன் குறிப்பிடப்பட்டிருத்தலால் இவன் இரா சேந்திர சோழன் ஆட்சிக் காலம் முழுமையும் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இவன் இவ்வேந்தனது ஆட்சியில் இராசேந்திர சோழ பிரமமாராயன் என்ற பட்டம் பெற்றுப் புகழுடன் விளங்கினான்.2

3. மாராயன் அருண்மொழியான உத்தமசோழ பிரம மாராயன்: இவன், மேலே குறிப்பிடப்பெற்ற படைத்தலைவன் கிருஷ்ணன் இராமன் என்பவனுடைய புதல்வன். இவன், தன் தந்தையைப்போல் இராசேந்திரன் ஆட்சியில் சிறப்புடன் நிலவிய அரசியல் தலைவன்; இராசேந்திர சோழன் ஆணையின் படி கங்கபாடி நாட்டிலுள்ள குவளாலபுரத்தில் கி. பி. 1033-ஆம் ஆண்டில் ஒரு படாரி கோயில் எடுப்பித்தவன்'; அருண்மொழி என்பது இவனது இயற்பெயர்; உத்தம சோழ மாராயன் என்பது இவனது அரசாங்க ஊழியத்தைப் பாராட்டி அரசன் அக்காலத்தில் வழங்கிய பட்டமாகும். பிரமமாராயன் என்பதனால் இவன் அந்தணர் குலத்தினன் என்று தெரிகிறது.

4. ஈராயிரவன் பல்லவயனான உத்தம சோழப் பல்ல வரையன்: இவன் சோழ நாட்டில் பாம்புணிக் கூற்றத்திலுள்ள அரசூரில் பிறந்தவன்; இராசேந்திர சோழனுடைய பெருந்தரத்து அதிகாரிகளுள் ஒருவன்; இராசராச சோழன் ஆட்சிக் காலத்திலும் அத்தகைய உயர்நிலையில் இருந்தவன். ஆனைமங்கலச் செப்பேடு களில் குறிப்பிடப்பட்ட அரசியல் தலைவர்களுள் இவனும் ஒருவன் ஆவன்.4

5. பாண்டியன் சீவல்லபன்: இவன் மனைவி சோழ நாட்டி லுள்ள திருவியலூர்க் கோயிலுக்குப் பல அணிகலன்கள்

1. Ins. 217 of 1911.

2. Ep. Ind., Vol. XXII, No. 34.

3. Ep. Car., Vol. X. KL., No. 109 a.

4. S. I. I., Vol. II, Nos. 12 and 55.