உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




168

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

8. கங்கைகொண்டசோழ மிலாடுடையான்: இவன் மேலே குறிப்பிடப்பெற்ற குறுநில மன்னனுக்குப் பின்னர் மலைய மானாட்டை அரசாண்டவன். இவன் கி. பி. 1024-ல் திருக்காளத்திக் கோயிலில் கார்த்திகை விளக்கீட்டிற்கு நிவந்த மாகப் பொன் வழங்கிய செய்தி, அவ்வூரிலுள்ள கல்வெட் டொன்றால் அறியக் கிடக்கின்றது. இவனும் இராசேந்திர சோழனுக்கு உட்பட்டிருந்த குறுநில மன்னர்களுள் ஒருவன் ஆவன்.

1

9. க்ஷத்திரியசிகாமணி கொங்காள்வான்: இவன் குட நாட்டிலிருந்த ஒரு சிற்றரசன்; மனிஜா என்னும் இயற்பெயர் உடையவன். வனது போர் வீரத்தைப் பாராட்டி இவனுக்கு க்ஷத்திரிய சிகாமணி கொங்காள்வான் என்னும் பட்டம் இராசராச சோழனால் அளிக்கப் பெற்ற செய்தி முன் கூறப் பட்டது. இவன் இராசேந்திர சோழன் காலத்தும் கொங்கு நாட்டில் குறுநில மன்னனாயிருந்து அரசாண்டு வந்தான்.

மைசூர் சில்லாவிலுள்ள சங்க நாட்டை ஆண்டு வந்த சங்காள்வார் மரபினரும், இராசேந்திர சோழனுக்குக் கப்பம் செலுத்திக் கொண்டிருந்தனர்.

சில காலத்திற்குப் பின்னர், கொங்காள்வார் தம்மைச் சோழர் வழியினர் என்று கூறிக்கொண்டமையோடு. தம்மைக் கரிகால சோழன் மரபினர் என்று சிறப்பித்துச் சொல்லிக் கொண்ட தெலுங்கச் சோழரைப்போல் பெருமையும் எய்துவாராயினர்.

இனி சோழர்களின் ஆற்றல், வீரம் ஆகியவற்றை அயல் நாட்டார் எல்லோரும் அறிந்து அடங்கியொழுகுமாறு செய்தவர்கள், பெரு வீரர்களாகிய இராசேந்திரன் புதல்வர்களும் பேராற்றல் படைத்த அரசியல் அதிகாரிகளுமே யாவர். அவர்கள் அலைகடல் நடுவுள் பல கலஞ் செலுத்திக் கடல் கடந்த நாடு களையும் கைப்பற்றினரெனின் அன்னோரது கடற்படை எத்துணை வலிமையுடையதாயிருத்தல் வேண்டும்? ராசேந்திரனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் சோழ

1. Ins. 291of 1904.