உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

169

ராச்சியம் யாண்டும் பரவிச் சிறப்புற்றிருந்தது. பழைய சென்னை மாகாணம், மைசூர் இராச்சியம் ஒரிசா மாகாணத்தின் தென்பகுதி, நைசாம் இராச்சியத்தின் பெரும்பகுதி, இலங்கை, மலேயா, சுமத்ரா ஆகிய நாடுகள் நம் இராசேந்திர சோழன் ஆட்சிக்கு உட் பட்டிருந்தன. அந்நாடுகளில் இவ்வேந்தனது ஆட்சி இனிது நடைபெறுமாறு உதவியவர்கள் இவனுடைய புதல்வர்களும் அரசியல் அதிகாரிகளுமே என்பது சிறிதும் புனைந்துரையன்று. சில சமயங்களில் சேய்மையிலிருந்த நாடு களில் தோன்றிய சிறு கலகங்களும் அவ்வரசியல் தலைவர்களால் அவ்வப்போது அடக்கப் பெற்றமையின் இவ்வேந்தன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடுகளில் மக்கள் அமைதியுடன் வாழ்ந்து வந்தனரெனலாம். ஆகவே இராசேந்திரன் ஆட்சிக் காலத்தில் சோழ இராச்சியம் என்றுங் காணமுடியாத மிக உயர்ந்த நிலையில் திகழ்ந்தது என்பது ஒருதலை.

ன்

தன் தந்தையிடமிருந்து உரிமையிற் கிடைத்த சோழ இராச்சியத்திற்குச் சக்கரவர்த்தியாகி, அதனை ஒப்பற்ற உயர் நிலைக்குக் கொணர்ந்து, பெருவாழ்வு பெற்றுப் புகழுடன் விளங்கிய இராசேந்திர சோழன் முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆட்சிபுரிந்து கி. பி. 1044-ல் இறைவன் திருவடியை அடைந்தான்` இவன் மனைவியருள் வீரமாதேவி என்பாள் இவனது பெரும் பிரிவிற்கு ஆற்றாமல் உடனுயிர் துறந்தாள்.' வடஆற்காடு சில்லாவில் பிரமதேசம் என்னும் ஊரில் காணப்படும் கல்வெட் டொன்று, இராசேந்திர சோழன் வீரமாதேவி ஆகிய இருவர் உயிர்கட்கும் நீர்வேட்கை தணிதற்பொருட்டு அவள் உடன் பிறந்தானாகிய சேனாபதி மதுராந்தகன் பரகேசரி மூவேந்தவேளான் என்பவன் ஒரு தண்ணீர்ப் பந்தல் நிறுவினான் என்று கூறுகின்றது. அன்றியும் அக்கல்வெட்டு, இராசேந்திர சோழன் அடக்கஞ் செய்யப்பெற்ற இடத்திலேயே அத்தேவியும் உயிர் நீத்தாள் என்று உணர்த்துவதால் இவ்வேந்தன் பிரமதேசம் என்னும் ஊரில் இறந்திருத்தல் வேண்டும் என்பதும், இவன் மாதேவியும்

1. Ins. 79 of 1919.

2. Ins. 260 of 1915.

3. Annual Report on South Indian Epigraphy for 1915-16, p. 118.