உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




170

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -3 அங்கு உடன்கட்டை ஏறியிருத்தல் வேண்டும் என்பதும் நன்கறியப்படுகின்றன. எனவே, இவ்வரசர்பெருமான், தன் இராச்சியத்தைச் சுற்றிப் பார்த்தற்குச் சென்றிருந்தபோது தொண்டை மண்டலத்திலுள்ள பிரமதேசம் என்னும் ஊரில் இறந்தனன் என்றுணர்க.

வ்வேந்தனது எட்டாம் ஆட்சி யாண்டில் வெளியிடப் பெற்ற திரிபுவனமாதேவிச் சதுர்வேதிமங்கலச் செப்பேட்டினைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தார் அரிதில் முயன்று பெற்றுத் 'தமிழ்ப் பொழில்' என்ற திங்களிதழில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத் தக்கதாகும். ‘கரந்தைத் தமிழ்ச் சங்கச் செப்பேடுகள்' என வழங்கும் இது, முதல் இராசேந்திர சோழன் கி. பி. 1020-ல் சோழ மண்டலத்தில் ஐம்பத்தோரூர்களைத் திரிபுவனமா மாதேவிச் சதுர்வேதிமங்கலம் என்ற பெயருடன் ஒரு தொகுதியாக்கி, வேதங்களிலும் சாத்திரங்களிலும் வல்ல அந்தணர் பலர்க்குப் பிரமதேயமாக வழங்கிய நிகழ்ச்சியை அறிவிப்பதாகும். ஐம்பத்தைந்து இதழ்களையுடைய இச் செப்பேட்டில் அவ்வூர்களின் பெயர்களும் நான்கெல்லை களும் விளைநிலங் களின் கணக்கும் அவற்றிலிருந்து வருவாயாக ஆண்டுதோறும் கிடைக்க வேண்டிய நெல்லும் காசும் அவற்றைப் பெறுதற் குரிய அந்தணர்களின் ஊர்களும் பெயர்களும் பங்குகளும் விளக்கமாக வரையப்பட்டுள்ளன. அவ்வூர்களிலிருந்து ஆண்டு தோறும் அன்னோர் பெறும் நெல் 51050 கலமும் காசு 321/2 -ம் ஆகும் என்பது இதனால் அறியப்படுகிறது. இதுகாறும் கிடைத்துள்ள செப்பேடுகளில் இதுவே மிகப் பெரியதாகும்.

பேரும் புகழும் படைத்துத் தனக்கு ஒப்பாரும் மிக்காரு மின்றி விளங்கிய முதல் இராசேந்திர சோழன் இவ்வறத்தைத் தன் தாயாகிய திரிபுவனமாதேவியின் பெயரால் செய்துள்ளமை இப்பெருவேந்தன் தன் தாயிடத்திற் கொண்டிருந்த பேரன்பினை இனிது புலப்படுத்துவதாகும்.

இக்காலத்தில் கம்போடியா என வழங்கப்பெறும் காம்போச நாட்டின் மன்னன் நம் இராசேந்திரனுக்குத் தன் நாட்டிலிருந்து அழகிய தேர் ஒன்றை அன்பின் கையுறையாக