உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




174

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

புகழெய்தியவன். போர்க்குணம் வாய்ந்த இத்தகைய பேரரசன் பிற வேந்தர் எல்லாம் தனக்கு அடங்கி நடத்தல் வேண்டும் என்று எண்ணுவது இயல்பேயாம்.

இனி, இவனது ஆட்சியின் இருபத்தேழாம் ஆண்டுக் கல்வெட்டில் காணப்படும் மெய்க்கீர்த்தி.

திங்களேர் தருதன் தொங்கல்வெண் குடைக்கீழ்

நிலமகள் நிலவ மலர்மகட் புணர்ந்து செங்கோ லோச்சிக் கருங்கலி கடிந்து மன்னுபல் லூழியுள் தென்னவர் மூவருள் மானா பரணன் பொன்முடி யானாப் பருமணிப் பசுந்தலை பொருகளத் தரிந்து வீரகே ரளனை ஆனைக்கிடு வித்து அசைவில் சுந்தர பாண்டியனைத் திசைகெடத் தொல்லையில் முல்லையூர்த் துரத்தி ஒல்கலில் வேணாட் டரசைச் சேணாட் டொதுக்கி

மேவுபுக ழிராமகுட மூவர்கெட முனிந்து வேலைகெழு காந்தளூர்ச் சாலை கலமறுத் தாகவ மல்லனு மஞ்சற் கேவுதன்

றாங்கரும் படையால் ஆங்கவன் சேனையுள்

கண்டப் பய்யனுங் கங்கா தரனும்

வண்டமர் களிற்றோடு மடியத் திண்டிறல்

விருதர் விக்கியும் விஜயா தித்தனுங் கடுமுரட் சாங்க மய்யனும் முதலினர் சமர பீருவொத் துடைத்தர நிமிர்சுடர்ப் பொன்னோ டைக்கரி புரவியொடும் பிடித்துத் தன்னா டையில் ஜயங்கொண் டொன்னார் கொள்ளிப் பாக்கை யொள்ளெரி மடுத்து வில்லவர் மீனவர் வெஞ்சினச் சளுக்கியர் வல்லவர் முதலினர் வணங்கவீற் றிருந்த ஜயங்கொண்ட சோழன் உயர்ந்த பெரும்புகழ்க் கோவி ராஜகேசரி வர்மரான உடையார் ஸ்ரீ இராஜாதி ராஜ தேவர்.'

1. S. I. I., Vol. IV, No. 537.

"