உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

175

என்பதேயாம். இவ்வேந்தன், மானாபரணன், வீரகேரளன், சுந்தரபாண்டியன் என்னும் பாண்டியர் மூவரையும் போரில் வென்றமையும் வேணாட்டரசனையும் இராமகுட மூவரையும் தோற்றோடச் செய்து காந்தளூர்ச் சாலையில் கலம் அறுத்தமையும் மேலைச்சளுக்கிய மன்னனாகிய ஆகவமல்லனை வென்று அவன் புதல்வராகிய விக்கிரமாதித்தனும், விசயாதித்தனும் புறங் காட்டி ஓடுமாறு செய்தமையும் அன்னோர் நகரமாகிய கொள்ளிப் பாக்கையை எரித்தமையும் அம்மெய்க்கீர்த்தியில் மிகத் தெளி வாகச் சொல்லப்பட்டுள்ளன. அவ்வீரச் செயல்கள் எல்லாம் கி.பி. 1044-ஆம் ஆண்டிற்கு முன்னரே நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது அக்கல்வெட்டினால் நன்கு புலனாகின்றது. எனவே, அவை யனைத்தும் இவன் தன் தந்தையின் ஆட்சிக் காலத்தில் இளவரசனாயிருந்த போது புரிந்த போர்கள் என்பது ஒருதலை. அப்போர் நிகழ்ச்சிகள் எல்லாம் முதல் இராசேந்திர சோழன் ஆட்சியில் விளக்கப்பட்டிருத்தலால் அவற்றை அப்பகுதியிற் காண்க.

இனி, இவனது ஆட்சியின் இருபத்தொன்பதாம் ஆண்டுக் கல்வெட்டு இவன் ஈழ நாட்டு மன்னர்களோடு போர் புரிந்த செய்திகளையும் இரண்டாம் முறை மேலைச் சளுக்கிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்ற வரலாற்றையும் கூறுகின்றது. இவனது மெய்க்கீர்த்தியில் காணப்படும் அப்பகுதி.

ஒருதனித் தண்டால் பெருகட லிலங்கையர் கோமகன் விக்கிரம பாகுவின் மகுடமும் முன்றனக் குடைந்து தென்றமிழ் மண்புலம் முழுவது மிழந்து எழுகட லீழம்

புக்கவிலங் கேச னாகிய விக்கிரம பாண்டியன் பருமணி மகுடமும் காண்டகு

தன்ன தாகிய கன்னக் குச்சியிலும்

ஆர்கலி ஈழஞ் சீரிதென் றெண்ணி

உளங்கொள் நாடுதன் னுறவொடும் புகுந்து விளங்குமுடி கவித்த வீரசலா மேகன் போர்க்களத் தஞ்சித்தன் கார்க்களி றிழிந்து

கவ்வையுற் றோடக் காதலி யொடுந்தன்