உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




176

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

தவ்வையைப் பிடித்துத் தாயை மூக்கரிய

ஆங்கவ மானம் நீங்குதற் காக மீட்டும் வந்த வாட்டொழி லுழந்து வெங்களத் துலந்தவச் சிங்களத் தரைசன் பொன்னணி முடியுங் கன்னரன் வழிவந் துரைகொ ளீழத் தரைச னாகியசீர் வல்லவன் மதன ராசன் எல்லொளித் தடமணி முடியுங் கொண்டு வடபுலத் திருகா லாவதும் பொருபடை நடத்திக் கண்டர் தினகரன் நாரணன் கணவதி வண்டலர் தெரியல் மதுசூ தனென்

றெனைப்பல வரையரை முனைவயிற் றுரத்தி

வம்பலர் தருபொழில் கம்பிலி நகருட் சளுக்கியர் மாளிகை தகர்ப்பித்து'

என்பதாம்.

இதில் குறிப்பிடப்பெற்ற இலங்கை வேந்தனாகிய விக்கிரம பாகுவை இராசாதிராசன் போரில் வென்ற செய்தி, இவன் ஆட்சியின் இருபத்தெட்டாம் ஆண்டுக் கல்வெட்டிலும் காணப் படுகின்றது. அன்றியும், ஐந்தாம் மகிந்தன் மகனாகிய அவ்விக்கிரமபாகு கி.பி.1029 முதல் 1041 வரையில்

லங்கையின் தென்கீழ்ப்பகுதியாகிய ரோகணத்திலிருந்து ஆட்சி புரிந்துள் ளான். எனவே அவனோடு நம் இராசாதிராசன் போர்புரிந்து வெற்றி எய்தியமை கி. பி. 1041-ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாதல் வேண்டும். ஆகவே, அப்போர் முதல் இராசேந்திர சோழன் ஆட்சியில் இராசாதிராசன் நிகழ்த்தியதாதலின் அதனை விளக்கமாக அங்குக் காணலாம்.

பிறகு, விக்கிரம பாண்டியன் என்னும் இலங்கையரசன் ஒருவனை இராசாதிராசன் கி. பி. 1046-ல் போரில் வென்றான் என்றும் அப்பாண்டியன் தனக்குரிய பாண்டிய நாட்டை

வன்பால் இழந்தமையால் ஈழ நாட்டையடைந்து அதன் ஆட்சியை ஏற்றுக் கொண்டவன் என்றும் மேற்குறித்த மெய்க் கீர்த்தி உணர்த்துகின்றது. இலங்கையிலிருப்பதற்கஞ்சித் துளுவ 1.S.I.I.,Vol.V, No. 978.