உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




188

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 அவ்விருவரும் வெவ்வேறு மனைவியரோ அன்றி ஒருவரோ என்பது தெரியவில்லை.

இவ்வேந்தன் ஆட்சிக்காலத்தில் அரசாங்க அலுவல்களில் அமர்ந்து நாட்டை நன்கு பாதுகாத்துவந்த அரசியல் தலைவர்கள் பலர் ஆவர். அன்றியும், இவனுக்குக் கப்பஞ் செலுத்திவந்த குறுநில மன்னரும் இருந்தனர். இவன் குந்தள நாடு முதலானவற்றிற்குப் படையெடுத்துச்சென்று அவ்விடங்களில் போர்புரிந்து வெற்றியுடன் தன் நாட்டிற்குத் திரும்புவதற்குச் சில திங்களாதல் சென்றிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். அக்காலங்களில் சோழநாட்டில் அமைதி நிலவுமாறு ஆட்சியை இனிது நடத்தி வந்தவர்கள் இவன் தம்பிமார்களும் அரசியல் அதிகாரி களுமேயாவர். சில தலைவர்கள் தம் சக்கர வர்த்தியோடு பகைப்புலத்திற்குச் சென்று வீரத்தோடு போர்புரிந்து புகழ் எய்தியுள்ளனர். எனவே இவன் காலத்து அரசியல் தலைவருள் சிலரை ஈண்டுக் குறிப்பதும் பொருத்தமேயாம்.

1

1. தண்டநாயகன் அப்பிமையனாகிய இராசேந்திர சோழ பிரமமாராயன்: இவன் இராசாதிராசன் படைத் தலைவர்களுள் ஒருவன்; கடப்பை ஜில்லாவிலுள்ள வல்லூரைத் தன் தலைநகராகக் கொண்டு மகாராசவாடி ஏழாயிரத்திற்கு அரசப்பிரதியாகவிருந்து ஆட்சிபுரிந்தவன்.' இவன் இராசேந்திர சோழ பிரமமாராயன் என்னும் பட்டம் பெற்றிருத்தலால் அந்தணர் குலத்தினன் என்பதும் முதல் இராசேந்திரசோழன் காலத்தில் அப்பட்டம் எய்தியவன் என்பதும் நன்கு புலனா கின்றன. ஆகவே, இவனது நீண்ட அனுபவம் பற்றி, இராசாதி ராசன் இவனை அப்பகுதியில் அரசப்பிரதிநிதியாக அமர்த்தினன் எனலாம்.3

2. சேனாபதி இராசேந்திரசோழ மாவலிவாணராயன்: இவன் இராசாதிராசன் படைத்தலைவர்களுள் ஒருவன்; முதல் இராசேந்திர சோழனால் பட்டம் வழங்கிப் பாராட்டப் பெற்றவன்; புதுச்சேரிக்கு அண்மையிலுள்ள திரிபுவனியில் 1. Ep. Car., Vol. X, Chintamani 30.

2. Ep. Car., Vol. IX, Dv. 76.

3. Ins. 176 of 1919.