உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

189

ஆண்டு ஒன்றிற்கு 12000 கலம் நெல் வருவாயுள்ள 72 வேலி நிலத்தைச் சில திருவிழாக்களும் ஒரு கல்லூரியும் நடத்துவதற்கு நிவந்தமாக வழங்கிய பருங்கொடைவள்ளல் இவன் கோயிலில் திருவாய்மொழி விண்ணப்பஞ் செய்வதற்கு ஏற்பாடு செய்திருத்தலால் வைணவ சமயத்தில் பெரும்பற்றும் ஆழ்வார்களிடத்தில் ஈடுபாடும் உடையவன் என்று தெரிகிறது.

3.

சேனாபதி சயங்கொண்ட சோழ வாணகோ வரையன்: இவன் இராசாதிராசன் படைத்தலைவர்களுள் ஒருவன்; மைசூர் இராச்சியத்திலுள்ள தடிகைபாடி நாட்டில் இவ்வேந்தன் ஆட்சிக்காலத்தில் அரசப் பிரதிநிதியாக இருந்தவன்.’

4. அதிகாரிகள் பாராசியன் வாசுதேவ நாராயண னாகிய உலகளந்த சோழ பிரமமாராயர்: இவர் இராசாதி ராசனுடைய குருதேவர் ஆவர். இவருக்கு வழங்கப் பெற்றுள்ள பட்டத்தை நோக்குங்கால், இராசாதிராசன் ஆட்சிக்காலத்தும் சோழ இராச்சியத்தின் ஒரு பகுதி அளந்து கணக்கெடுக்கப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாகின்றது.

5.

தண்டநாயகன் சோழன் குமரன் பராந்தக மாராயனாகிய இராசாதிராச நீலகங்கரையன்: இவன் இராசாதிராசன் ஆட்சிக்காலத்திலிருந்த படைத்தலைவருள் ஒருவன் அரசனால் அளிக்கப் பெற்ற இராசாதிராச நீலகங்கரையன் என்னும் பட்டம் பெற்றவன்; இவனைப்பற்றிய கல்வெட் டொன்று திருவொற்றியூர்க் கோயிலில் உளது.4 எனவே, இவன் தொண்டை மண்டலத்தின் வடபகுதியிலிருந்த ஒரு தலைவன் ஆதல் வேண்டும்.

6.

தண்டநாயகன் வெண்காடன் சங்கரனாகிய இராசாதிராசப் பல்லவராயன்:- இவன் உத்தமசோழ நல்லூரினன்; இராசாதிராசனுடைய படைத்தலைவருள்

1. Ep. Car., Vol. IX, NL. 25.

2. S. I. I., Vol. VII, No. 1046.

3. S. I. I., Vol. VII. No 1046.

4. Ins. 102 of 1912.