உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




190

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 ஒருவன்; அரசாங்க அலுவலாளருள் பெருந்தரம் என்ற உயர் நிலையில் அமர்ந்திருந்தவன்; அரசனால் வழங்கப் பெற்ற இராசாதிராசப் பல்லவராயன் என்னும் பட்டம் பெற்றவன்; இவன் அந்தணர்களையும் சிவயோகிகளையும் நாள்தோறும் உண்பித்தற்குத் திருச்சிராப்பள்ளிக்கு வடமேற்கேயுள்ள திருப் பைஞ்ஞீலிக் கோயிலைச் சார்ந்த செந்தாமரைக் கண்ணன் மடத்திற்கு நிலம் அளித்துள்ளனன் என்பது அவ்வூரிலுள்ள ஒரு கல்வெட்டால்' அறியப்படுகின்றது. எனவே, இவன் சோழ மண்டலத்தின் மேற்பகுதியில் கொங்குநாட்டெல்லைப் புறத்தில் தங்கியிருந்த ஒரு தண்டநாயகன் என்பது இனிது விளங்குதல் காண்க.

1. S. I. I., Vol, IV, No. 537.