உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம்-1

197

என்னும் விக்கிரமசோழன் உலாவடிகளால்' அவன் அரங்க நாதரிடம் அன்பு பூண்டு அப்பெருமானுக்குப் பொன்னாலும் மணியாலும் அரவணையொன்று அமைத்தனன் என்பது அறியப்படுகின்றது. அக் கோயிலில் இராசமகேந்திரன் திருவீதி என்னும் பிராகாரம் ஒன்றும் அவன் எடுப்பித்தான் என்று கோயிலொழுகு என்ற நூல் கூறுகின்றது. கலிங்கத்துப் பரணியில் இரண்டாம் இராசேந்திரனுக்கும் வீரராசேந்திரனுக்கும் நடுவில் வைத்து மும்முடி சோழன் பாராட்டப் பெற்றுள்ளான். அவ்வாறே விக்கிரமசோழன் உலாவில் இரண்டாம் இராசேந்திரனுக்கும் வீரராசேந்திரனுக்கும் இடையில் திருவரங்கத் திருப்பணி புரிந்த இராசமகேந்திரன் புகழப்பட்டிருக்கின்றான். எனவே, சயங் கொண்டார் கூறிய மும்முடி சோழனே திருவரங்கத் திருப்பணி புரிந்த இராசமகேந்திரன் என்று அவ்வாசிரியர் காலத்திற்கு அண்மையிலிருந்த ஒட்டக்கூத்தரும் கருதியுள்ளனர் என்பது நன்கு விளங்குதல் காண்க.

3

இனி, மும்முடி சோழன் என்பான் இரண்டாம் இராசேந் திரனுக்குத் தம்பியும் வீரராசேந்திரனுக்குத் தமையனும் ஆவன் என்பது திருமழபாடி, திருவல்லம் என்னும் ஊர்களிலுள்ள கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. இரண்டாம் இராசேந்திரன் அவனுக்குச் சோழபாண்டியன் என்னும் பட்டம் வழங்கினான் என்று அக்கல்வெட்டுக்களே உணர்த்துகின்றன. ஆகவே, மதுரைமாநகரில் அரசப்பிரதிநிதியாயிருந்து பாண்டிய நாட்டையும் சேர நாட்டையும் அரசாண்டு வந்த மும்முடி சோழனே சோழநாட்டில் இளவரசுப்பட்டம் பெற்ற நாளில் இராசமகேந்திரன் என்னும் பெயர் எய்தியிருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். ஆதலால், இராசமகேந்திரன் என்பான் இரண்டாம் இராசேந்திரனுடைய புதல்வன் என்று கூறுவது பொருந்தாமை காண்க. அன்றியும், நம் இராசேந்திரன் தன் மக்கள் அறுவர்க்கும் உத்தமசோழன், விசயாலய சோழன், சோழ கேரளன், சோழஜனகராசன், சுந்தரசோழன், சோழகன்னக்

1.

விக்கிரமசோழன் உலா, வரிகள் 40-42.

2. கோயில் ஒழுகு, பக். 3.

3. S. I. I., Vol. V, Nos, 489 and 647.

"