உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

213

முயற்சியும் எண்ணமும் நிறைவேறாமற் போன செய்தி மகா வம்சத்தாலும் நன்கறியப்படுகின்றது. ஆனால் வீரராசேந்திரன் கல்வெட்டிற்கும் மகாவம்சத்திற்கும் ஒரு சிறு வேறுபாடு காணப்படுகின்றது. வீரராசேந்திரன் விசயபாகுவை அடக்கு வதற்குக் கடல் அடையாது பல கலங்களில் ஒரு பெரும் படையைச் சோழ நாட்டிலிருந்து ஈழநாட்டிற்கு அனுப்பினான் என்று கல்வெட்டு அறிவிக்கின்றது. மகாவம்சமோ வீரராசேந்திரன் விசயபாகுவின் முயற்சியை யறிந்தவுடன் ஈழத்தில் புலத்தி நகரத்திலிருந்த தன் படைத்தலைவன் ஒருவனை ரோகண நாட்டிற்குப் பெரும்படையுடன் அனுப்பி, அவனைப் போரில் வென்று அடக்குமாறு செய்தான் என்று கூறுகின்றது. இதுவே இவ்விரண்டிற்குமுள்ள வேறுபாடாகும். விசயபாகு, சோழர் படைக்கு முன் நிற்கும் ஆற்றலின்றி ஓடி ஒளிந்தவனாயினும், சில ஆண்டுகட்குப் பிறகு ரோகணத்தி லிருந்து கொண்டு ஈழமண்டலத்தின் ஆட்சியை மீண்டும் கைப்பற்றினான் என்று தெரிகின்றது. ஆகவே, அவன் வீரராசேந்திரன் படைத் தலைவன்பால் தோல்வியுற்றோடியபின் மீண்டும் வந்து அப்பகுதியில் தான் இருந்தனனாதல் வேண்டும்.

இனி, வீரராசேந்திரனது ஆட்சியின் ஏழாம் ஆண்டுக் கல்வெட்டு, இவன் தன் கழலடைந்த ‘மன்னர்க்குக் கடாரம் எறிந்து கொடுத்தருளி' னான் என்று கூறுகின்றது. இவன் தந்தை யாகிய கங்கைகொண்ட சோழன் கி.பி. 1025-ல் ஸ்ரீ விஜய ராச்சியத்தின் மேல் படையெடுத்துச் சென்று கடாரத்த ரசனாகிய சங்கிராம விசயோத்துங்கவர்மனைப் போரில் வென்று வந்த செய்தி முன்னர் விளக்கப்பட்டுள்ளது. கி. பி. 1068-ஆம் ஆண்டில் தன்பால் அடைக்கலம் புகுந்த கடாரத்தரசன் பொருட்டு, வீரராசேந்திரன் அந்நாட்டின் மீது படையெடுத்துச் சென்று, அதனைக் கைப்பற்றி அவ்வரசனுக் களித்தான்.1 தன் நாட்டை இழந்து சோணாட்டிற்கு வந்து அடைக்கலம் புகுந்த கடார

1. இக்கடாரப் படையெடுப்பு நிகழ்ந்த போது வீரராசேந்திரன் நேரில் அந்நாட்டிற்குச் செல்லவில்லை; ஆனால் சோழ நாட்டுப் படைத் தலைவர் சிலரை அனுப்பிப் போர் நிகழ்த்தினனாதல் வேண்டும். இவன் தங்கையின் புதல்வன் முதற் குலோத்துங்க சோழனும் இப்படையெடுப்பிற் கலந்துகொண்டு கடாரஞ்சென்று அவ்வரசனுக்கு உதவி புரிந்தான் என்று தெரிகிறது.