உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




214

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 மன்னன் யாவன் என்பதும் அவன் அதனைத் தன் பகைவனாகிய பிறநாட்டரசனிடம் இழக்க நேர்ந்ததா அன்றித் தன் தாயத்தினர் பால் இழக்க நேர்ந்ததா என்பதும் புலப்படவில்லை. எனினும் வீரராசேந்திரன் பேருதவியினால் அவன் தனக்குரிய நாட்டை மீண்டும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. 'வீரமே துணை யாகவும்" என்று தொடங்கும் இவனது சிறிய மெய்க் கீர்த்தியில்தான் கடாரப் படையெழுச்சி சொல்லப்பட்டுள்ளது. இனி, இவனது மெய்க்கீர்த்தியில்,

'சோமேசுவரனைக் கன்னடதேசங் கைவிடத்துரத்தித் தன்னடியடைந்த சளுக்கி விக்கிரமாதித்தனை எண்டிசை நிகழக் கண்டிகை கட்டி இரண்டபாடி ஏழரை இலக்கமும் எறிந்து கொடுத்தருளி னான்

என்று கூறப்பட்டிருப்பது ஆராயற்பாலதாகும்.

மேலைச்சளுக்கிய மன்னனாகிய ஆகவமல்லன் கி. பி. 1068-ல் இறந்தபின்னர் இளவரசனாயிருந்த அவன் முதற் புதல்வன் இரண்டாம் சோமேசுவரன் முடிசூட்டப் பெற்றான்.' அச்சமயத்தில் வீரராசேந்திரன் படையெடுத்துச் சென்று அனந்தப்பூர் ஜில்லாவிலுள்ள குத்தி என்னும் நகரை முற்றுகையிட்டுச் சோமேசுவரன் முன் நிற்க முடியாமல் விரைவில் திரும்பி விட்டான் என்று அச் சளுக்கிய மன்னன் கல்வெட்டொன்று கூறுகின்றது. ஆனால் வீரராசேந்திரன் சோமேசுவரன் கட்டிய கண்டிகை அவிழ்ப்பதன் முன்னம், அவன் நாட்டின்மேல் படையெடுத்துச் சென்று, பல்லாரி ஜில்லாவிலுள்ள கம்பிலி நகரை எரித்து, குத்தியை முற்றுகை யிட்டு, இடைதுறை நாட்டிலுள்ள கரடிக்கல்லில் வெற்றித்தூண் ஒன்று நிறுவினான் என்று அவன் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. அன்றியும், வன் அச் சோமேசுவரனைக் கன்னட தேசத்தைக் கை

3

1. S. I. I., Vol. V, No. 468; Ep. Ind. Vol. XXV, p. 263.

2. கி.பி.1068-ஆம் ஆண்டு மார்ச் 30-ல் ஆகவமல்லன் இறந்தான், பின்னர் ஏப்ரல் 11-ல் இரண்டாம் சோமேசுவரன் முடிசூட்டப்பட்டான், (Ep. Ind., Vol XXV, p. 249)

3. Ep. Car., Vol. VII, SK, No. 136.