உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

1

215

லக்கத்தை

விட்டோடும்படி செய்து, இரட்டபாடி ஏழரை வென்று, தன்னையடைந்து வணங்கி உதவிவேண்டிய சளுக்கிய விக்கிரமாதித்தனுக்கு அதனை வழங்கி முடி சூட்டினான் என்று அக்கல்வெட்டுகள் கூறுகின்றன. விக்கிரமாங்கதேவ சரிதத்தில் அச்செய்திகள் விக்கிரமாதித்தனைப் புகழ்ந்துகூறும் முறையில் வேறுபட்டுக் காணப்படுகின்றன. இரண்டாம் சோமேசுவரன் முடி சூடியபிறகு தீயநெறியிற் சென்று பல்வகையாலும் குந்தள நாட்டு மக்களை வருத்தவே, அதுபற்றிக் குடிகட்கு அவன்பால் வெறுப்பு ஏற்பட்டது என்றும், அதனை யுணர்ந்த இளவலாகிய விக்கிரமாதித்தன் அவனை நன்னெறிக்குத் திரும்புவதற்குப் பெரிதும் முயன்று, பயன் படாமையால் மனம் வேறுபட்டுத் தன் தம்பி சயசிம்மனோடு கல்யாணபுரத்தைவிட்டுப் போய் விட்டான் என்றும், அங்ஙனம் போகுங்கால் சோமேசுவரன் படையையும் புறங்காட்டி ஓடச்செய்து, வனவாசியில் துங்கபத்திரைக் கரையில் சிலகாலம் வரையில் தங்கியிருந்தான் என்றும், பிறகு அவன் சோணாட்டின் மீது படையெடுத்துச் செல்ல முயன்றபோது கோவா நகரத்திலிருந்த கடம்பர்குல மன்னன் சயகேசியும் ஆளுபவேந்தனும் அவனைப் பணிந்து உதவி புரிந்தனர் என்றும், அவற்றையறிந்த வீரராசேந்திரன் அச்சமுற்றுத் தன் மகளை அவனுக்கு மணஞ்செய்து கொடுப்ப தாக ஒரு தூதன் மூலம் தெரிவிக்கவே, அவனும் உடன்பட்டுத் துங்கபத்திரைக் கரையில் சோழமன்னன் மகளை மணந்து

காண்டான் என்றும், அதுமுதல் விக்கிரமாதித்தனும் வீரராசேந்திரனும் உறவினாற் பிணிக்கப்பெற்றனர் என்றும் அச்சரிதம் கூறுகின்றது. அன்றியும், கடம்ப அரசனாகிய முதல் சயகேசி என்பான், தான் மேலைச்சளுக்கியர்க்கும் சோழர்க்கும் காஞ்சிமாநகரில் நட்புரிமையுண்டுபண்ணி, விக்கிரமாதித்தன் எத்தகைய இடையூறுமின்றிக் குந்தள நாட்டிலிருந்து ஆட்சி புரிந்து வருமாறு ஏற்பாடு செய்ததாகத் தன் கல்வெட்டுக்களில் குறித்துள்ளனன்.' அவற்றை யெல்லாம் ஆராய்ந்து பார்க்கு மிடத்து ஆகவமல்லன் இறந்தபின்னர், அவன் புதல்வர்களாகிய

1. S. I. I., Vol. III Nos. 83 & 84.

2. Bombay Gazetteer, Vol I, Part II, p, 567.