உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




216

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

இரண்டாம் சோமேசுவரனுக்கும் விக்கிரமாதித்தனுக்கும் முரண்பாடு ஏற்பட்டிருத்தல் வேண்டும் என்பது நன்கு வெளியாகின்றது.1 அந்நாட்களில் ஆகவமல்லனுடைய மூன்றாம் புதல்வனாகிய சயசிம்மனும் கடம்ப வேந்தனாகிய சயகேசியும் விக்கிரமாதித்தனுக்கு ஆதரவளித்து உதவி புரிவாராயினர். அவர்களுள், சயகேசி என்பான் காஞ்சிமாநகர் சென்று, நம் வீரராசேந்திரனுக்கும் விக்கிரமாதித்தனுக்கும் நட்புரிமை ஏற்படுமாறு செய்திருத்தல் வேண்டும் என்பது அவன் கல்வெட்டினால் அறியக் கிடக்கின்றது. அங்ஙனம் ஏற்பட்ட நட்பின் பயனாக வீரராசேந்திரன் இரட்டபாடி ஏழரை இலக்கத்தின்மேல் படையெடுத்துச் சென்று, இரண்டாம் சோமேசுவரனைப் போரில் வென்று துரத்திய பின்னர் அந்நாட்டை விக்கிர மாதித்தனுக்கு வழங்கியிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை.* ஆகவே, அந்நிகழ்ச்சியைத்தான் இவன் மெய்க்கீர்த்தி மிகச் சுருக்கமாக உணர்த்துகின்றது என்பது அறியற்பாலதாகும்.

நம் வீரராசேந்திரன் தன் ஆட்சிக்காலம் முழுவதும் அவ்வாறு போர் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டிருந்தனனாயினும், தன் இராச்சியத்திலுள்ள குடிகட்கு எத்தகைய இன்னல்களுமின்றி அன்னோரைப் புரந்து வந்தமை பெரிதும் பாராட்டத்தக்கது. இவனும் தன் முன்னோர்களைப் போல் சிவபெருமானிடத்தில் பேரன்பு பூண்டு ஒழுகிவந்தனன்.' இவன் தில்லையம்பதியில் பொன்னம்பலத்தில் எழுந்தருளியுள்ள நடராசப்பெருமானுக்கு அணிவதற்குத் திரைலோக்கியசாரம் என்ற சிறந்த முடிமணி யொன்று அளித்தனன் என்று வனது கன்னியாகுமரிக் கல்வெட்டு உணர்த்துகின்றது." அன்றியும் இவன் சோழ நாடு, 1. குந்தள இராச்சியத்தின் தென்பகுதியில் திரைலோக்கிய மல்லன் என்ற பட்டத்துடன் விக்கிரமாதித்தன் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அவன் அந்நிலப் பரப்பில் தன் தமையன் சோமேசுவரன் பிரதிநிதியாகவிருந்து அரசாண்டனனாதல் வேண்டும். அன்றேல் அந்நாட்டின் வட பகுதியைச் சோமேசுவரனும் தென்பகுதியை விக்கிரமாதித்தனும் ஆட்சி புரிந்தனர் என்று கொள்ள வேண்டும்.

2. அந்நட்பினால்தான் வீரராசேந்திரன் தன்மகளை விக்கிரமாதித்தனுக்கு மணஞ்செய்து கொடுத்திருத்தல் வேண்டும் என்பது ஒருதலை.

3. சிவபெருமான் திருவடிகளைத் தன் தலையில் அணிந்தவன் Ep. Ind., Vol. XXV, p. 254. 4. Travancore Archaeological Series, Vol. III. No. 34 Verse 79.