உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

217

பாண்டி நாடு, தொண்டைநாடு, கங்கநாடு, குலூதநாடு என்ப வற்றில் மூன்று வேதங்களிலும் வல்ல நாற்பதினாயிரம் பிராமணர் கட்குப் பிரமதேயங்கள் வழங்கி அவர்கள் அந்நாடுகளில் என்றும் நிலைபெற்று வாழுமாறு செய்தான் என்று அக்கல்வெட்டே கூறுகின்றது. இவன் ஆகவமல்லனையும் அவன் புதல்வர்களையும் கூடல் சங்கமத்துப் போரில் வென்று கைப்பற்றிய நாடாகிய இரட்டபாடி கொண்ட சோழமண்டலத்திலுள்ள சேராம் என்னும் ஊரைக் கி. பி. 1069-ஆம் ஆண்டில் உத்தராயண சங்கராந்தி நாளில் மூன்று பிராமணர்கட்குப் பிரமதேயமாக அளித்தனன் என்பது அவ்வூரிலிருந்து கிடைத்த செப்பேடு களால் அறியப்படுகிறது.* அவ்வூர் இக்காலத்தில் சித்தூர் ஜில்லா புங்கனூர்த் தாலுகாவில் சாரால என்னும் பெயருடன் உள்ளது.

இனி, இவன் தந்தையின் காலத்தில் சோழ இராச்சி யத்திற்குத் தலைநகராயிருந்த கங்கைகொண்ட சோழபுரமே இவன் ஆட்சிக் காலத்தும் தலைநகராயிருந்தது என்பது, இவன் மேலைச்சளுக்கியரைப் போரில் வென்று 'ஜயத்திருவொடும் கங்காபுரி புகுந்தருளி' னான் என்று கல்வெட்டுகள் கூறுவதால் நன்கறியப்படுகின்றது' அப்பெருநகரில் சோழகேரளன் மாளிகை என்னும் அரண்மனையில் இராசேந்திரசோழ மாவலி வாணராயன் என்ற அரியணையில் இவன் வீற்றிருந்து அறங்கள் புரிந்துள்ளமை கல்வெட்டுக்களில் காணப்படுகின்றது.4

இவ்வேந்தனுக்கு அந்நாளில் பல பட்டங்கள் வழங்கி வந்தன என்பது இவன் கல்வெட்டுக்களாலும் செப்பேடு களாலும் அறியக்கிடக்கின்றது. அவை, சகல புவனாசிரயன், ஸ்ரீமேதினி வல்லவன், மகாராசாதிராசன், பரமேசுவரன், பரம பட்டாரகன், இரவிகுலதிலகன், சோழகுலசேகரன், பாண்டிய குலாந்தகன், ஆகவமல்லகுலகாலன் ஆகவமல்லனை ஐம்மடி வென்கண்ட ராசசேகரன், இராசாசிரயன், இராச ராசேந்திரன்,

1. Travancore Archaeological Series, Vol. III. No. 34 Verses 80 and 81.

2. Ep. Ind., Vol. XXV, No. 25 இச்செப்பேடுகளில் முதலிலுள்ள 81 சுலோகங்கள் கன்னியாகுமரிக் கல்வெட்டிலும் இருத்தல் அறியத்தக்கது.

3. Ep, Ind., Vol. XXI, No, 38, Line 7.

4. Ibid, Line II.