உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




218

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

வீரசோழன், கரிகாலசோழன், வீரன், இரட்ட ராசகுல காலன் என்பனவாம். அவற்றுள் முதல் ஐந்து பட்டங்கள் மேலைச் சளுக்கிய மன்னர்கள் புனைந்து கொண்ட பட்டங்களாக இருத்தல் அறியத் தக்கது. அவர்களையும் பன்முறை வென்ற காரணம் பற்றி அவர்கள் பட்டங்களையும் இவ்வேந்தன் புனைந்து கொண்டனன் போலும்; மற்றுஞ் சில பட்டங்கள், மேலைச் சளுக்கிய வேந்தனாகிய ஆகவமல்லனையும் பாண்டியனையும் போரில் வென்று வாகை சூடியமைபற்றி இவன் புனைந்து கொண்டன் வாகும்; வேறு சிலபட்டங்கள், இவன் தான் தோன்றிய குலத்தைச் சிறப்பித்தமை பற்றி எய்தியனவாகும். கரிகாலசோழன் என்பது இவன் தமையன் இரண்டாம் இராசேந்திரன் இவனுக்கு வழங்கிய பட்டம் என்று அவன் கல்வெட்டுக்களால் தெரிகிறது." வீரராசேந்திர சோழர் என்னும் இயற்பெயர் வீரசோழன் என்றும் வழங்கப்பெறுவது இயல்பேயாம்.

இனி, வீரராசேந்திரன் ஆட்சிக்காலத்தில் பாண்டி மண்டலத்தில் மிழலைக் கூற்றத்திலுள்ள பொன்பற்றி என்னும் நகரில் சிற்றரசனாயிருந்த புத்தமித்திரன் என்பான் இவன் விரும்பியவாறு ஐந்திலக்கணங்களு அடங்கிய நூல் ஒன்றெழுதி அதற்கு வீரசோழியம் என்று பெயரிட்டுள்ளான். அந்நூலில் ‘எல்லாவுலகும்-மேவிய வெண்குடைச் செம்பியன் வீரராசேந்திரன்றன்-நாவியல் செந்தமிழ்ச் சொல் எனவும், 'தேமேவியதொங்கற் றேர்வீரசோழன் றிருப்பெயரால்- பூமேலுரைப்பன் வடநூன் மரபும் புகன்று கொண்டே எனவும், இம்மன்னன் பாராட்டப்பெற்றிருப்பது அறியற்பாலது. எனவே, வன் தமிழ்மொழி வளர்ச்சியிலும் ஈடுபட்டிருந்தனன் என்பது தேற்றம்.

4

இவ்வரசர் பெருமான் பட்டத்தரசி உலக முழுதுடையாள் என்னுஞ் சிறப்புப்பெயருடன் இவன் கல்வெட்டுக்களில் முதற் குலோத்துங்க சோழன்

குறிக்கப்பெற்றுள்ளனள்.

1. Ep. Ind., Vol. XXV, pp. 262 and 263.

2. S. I. I., Vol. V. Nos 644 and 647.

3. வீரசோழியம், சந்திப்படலம், 7.

4. வீரசோழியப்பாயிரம் பா.3.