உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

219

ஆட்சிக்காலத்தில் கி. பி. 1085-ல் வீரராசேந்திரன் மனைவி அருமொழி நங்கை என்பாள் தஞ்சை இராசராசேச்சுரக் கல்வெட்டொன்றில் சொல்லப்பட்டுள்ளனள். எனவே, அவ்வரசி தன் கணவன் இறந்த பிறகு பதினைந்து ஆண்டுகள் வரையில் உயிர் வாழ்ந்திருந்தனள் எனலாம். உலக முழுதுடையாளும் அருமொழி நங்கையும் வெவ்வேறு மனைவியரோ அன்றி ஒருவரோ என்பது தெரியவில்லை.

2

இவனுக்கு மதுராந்தகன், கங்கைகொண்ட சோழன் என்னும் இரண்டு புதல்வர் இருந்தனர் என்பது இவன் கல்வெட்டுக் களால் புலப்படுகின்றது. அவர்களுள் மதுராந்தகனுக்குச் சோழேந்திரன் என்ற பட்டம் வழங்கி, அவன் தொண்டை மண்டலத்தில் அரசப் பிரதிநிதியாயிருந்து ஆட்சிபுரிந்து வருமாறு இவன் முடிசூட்டினான்; மற்றொரு புதல்வனாகிய கங்கை கொண்ட சோழனுக்குச் சோழ பாண்டியன் என்னும் பட்டம் வழங்கி அவன் பாண்டி மண்டலத்தில் அரசப் பிரதி நிதியாயிருந்து அரசாண்டு வருமாறு முடிசூட்டினான். எனவே, இவன் தன் புதல்வர்கள் அரசியல் முறையில் நன்கு பயிற்சி பெற்றுத் தேர்ச்சி யடையவேண்டும் என்னும் உயர்ந்த நோக்கத் துடன் தன் ஆட்சிக்குட்பட்ட பிறமண்டலங்களில் அவர்களை அரசப் பிரதிநிதிகளாக அமர்த்தினனாதல் வேண்டும். இவனுக்கு ஒரு புதல்வி இருந்தனள் என்றும் அம்மகளை மேலைச் சளுக்கிய மன்னனாகிய ஆறாம் விக்கிரமாதித்தனுக்கு இவன் மணஞ் செய்து கொடுத்தனன் என்றும் விக்கிரமாங்கதேவ சரிதம் கூறுகின்றது. அப்புதல்வியின் பெயர் தெரியவில்லை. இவனுக்குப் பிறகு முடிசூட்டப் பெற்றவனும் சளுக்கிய விக்கிரமாதித்தனுக்கு

1. S. I. I., Vol. II, No. 58.

2. தன்றிருப் புதல்வனாகிய மதுராந்தகனை வாளேந்துதானைச் சோழேந்திரனென்று எண்டிசை நிகழ எழில் முடிசூட்டித்

தொண்டைமண்டலங் கொடுத்தருளித்

திண்டிறல் மைந்தனாகிய கங்கைகொண்ட சோழனை

ஏழுயர் யானைச் சோழபாண்டியனென்று

ஈண்டுயர் மணிமுடி இசைபெறச் சூட்டிப்

பாண்டி மண்டலங் கொடுத்தருளி

(S. I. I., Vol, V. No. 976)