உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




220

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

மைத்துனன் என்று விக்கிரமாங்கதேவ சரிதத்தில் கூறப் பெற்றவனும் ஆகிய அதிராசேந்திர சோழன் மேலே குறிப்பிட்ட இரு புதல்வர்களுள் யாவன் என்பது புலப்படவில்லை. நம் வீரராசேந்திரன் தன் தமையன் ஆளவந்தான் என்பவனுக்கும் சுந்தரசோழன் என்பவனுக்கும் பட்டங்கள் வழங்கிச் சில நாடுகளுக்கு அவர்களை அரசப் பிரதிநிதிகளாக அமர்த்தினன் என்று இவன் கல்வெட்டு உணர்த்துகின்றது. ஆனால் அவர் களைப் பற்றியும் அவர்கட்கு அளிக்கப் பெற்ற நாடுகளைப் பற்றியும் ஒன்றும் தெரியவில்லை.

இனி, இவ்வேந்தன் ஆட்சிக்காலத்தில் அரசியல் அதிகாரி களாக இருந்தோர் பலர் ஆவர். இவனது திருமுக்கூடல் கல்வெட்டில் அரசியலில் சம்பந்தப்பட்ட எண்பதின்மர் பெயர்கள் காணப்படு கின்றன. வேறு கல்வெட்டுக்களிலும் பல அரசியல் தலைவர் களின் பெயர்கள் உள்ளன. அவர்களுள் சிலரைப்பற்றிய செய்தி களை அடியிற் காண்க.

1. சேனாபதி கங்கைகொண்ட சோழ தன்மபாலன்: இவன் திருமுக்கூடல் திருமால் கோயிலில் சனநாதன் மண்டபமும் திருச்சுற்று மாளிகையும் கட்டுவித்த வைசியன் மாதவன் தாமயன் என்பவனுடைய புதல்வன்; வீரராசேந்திரன் படைத்தலைவர் களுள் ஒருவன்; வைசிய குலத்தினன்; வயலைக்காவூரைத் தன் காணியாக உடையவன்.

1

2. சேனாபதி வீரராசேந்திர தன்மபாலன்: இவன் மேலே குறிப்பிடப்பெற்ற தலைவனுக்குத் தம்பியாவன். இவனும் வீரராசேந்திரன் காலத்துப் படைத்தலைவர்களுள் ஒருவன்.

3. இராசேந்திர மூவேந்த வேளான்: இவன் வீரராசேந்திரன் ஆட்சிக்காலத்திலிருந்த அரசியல் அதிகாரி களுள் ஒருவன்; திருவரங்கன் என்னும் இயற் பெயருடையவன்; திருவொற்றியூரில் படம்பக்க நாதர் கோயிலைக் கற்றளியாக எடுப்பித்து அங்கு வீரராசேந்திரன் பெயரால் திருநந்தவனம் ஒன்றும் அமைத்தவன்.’

1. Ep. Ind., Vol. XXI, No. 38.

2. Ins. 228 and 232 of 1912.