உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம்-1

4.

221

சயசிங்ககுலகால விழுப்பரையன்: வன் வீரராசேந்திரன் ஆட்சிக்காலத்திலிருந்த அரசியல் அதிகாரிகளுள் ஒருவன்; திருவொற்றியூர்க் கோயிலில் வீரராசேந்திரன் பிறந்த ஆயிலிய நாளில் திங்கள் தோறும் விழா நடைபெறுமாறு ஏற்பாடு செய்தவன்;' எனவே இத்தலைவன் தன் அரசன்பால் கொண்டிருந்த பேரன்பு பெரிதும் பாராட்டத்தக்கது.

5. சேனாபதி வீரராசேந்திர காரானை விழுப்பரையன்: இவன் வீரராசேந்திரன் படைத்தலைவர்களுள் ஒருவன்; திருவா மாத்தூர்க் கோயிலுக்குப் பொன்னும் பசுக்களும் அளித்தவன்.'

6. வீரராசேந்திர பிரமாதிராசன்: இவன் வீரராசேந்திரன் உடன் கூட்டத்ததிகாரிகளுள் ஒருவன்.

3

7.தாழித்திருப்பனங் காடுடையானான வானவன் பல்லவரையன்: இவன் க்ஷத்திரியசிகாமணி வளநாட்டுப் பனையூர் நாட்டு நேரிவாயில் என்னும் ஊரினன்; வீரராசேந்திரன்பால் திருமந்திர ஓலை என்னும் உத்தி யோகத்தில் அமர்ந்திருந்தவன்.

5

8. திருவெண்காட்டு நங்கை மகன் சிவலோகநாதன்: இவன் வீரராசேந்திரன் பிறந்த ஆயிலியநாளில் திங்கள்தோறும் திருவெண்காட்டுப் பெருமானுக்குப் பாலுந் தேனுங்கொண்டு நீராட்டி வழிபடுதற்கும் விழா நடத்துதற்கும் சிவயோகிகள் முதலானோர்க்கு உணவளித்தற்கும் வேண்டும் நிவந்தங்கள் அளித்துள்ளான். திருவெண்காட்டுத் திருக்கோயிலில் பாடலாக அமைந்த கல்வெட்டொன்று இவனது தமிழ்ப் புலமையினையும் சிவபத்தியினையும் நன்கு புலப்படுத்துகின்றது. இவன் திருவொற்றியூரில் கூத்தப்பெருமான் எழுந்தருளியுள்ள கருங்கற் பீடத்தை அமைத்து அதற்கு வீரராசேந்திரன் என்று பெயரிட்டுள்ளமை இவன் வன் வேந்தன்பால் வைத்திருந்த

1. Ins. 136 of 1912.

2. Ins. 3 of 1922.

3. Ep. Ind., Vol. XXI. No. 38.

4. S. I. I., Vol. III, No. 20.

5. செந்தமிழ், தொகுதி 14, பக். 364-65.