உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




222

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

பேரன்பினை விளக்குவதாம் ச்செயல்களை நோக்குமிடத்து இவன் வீரராசேந்திர சோழனுடைய அதிகாரிகளுள் ஒருவனாதல் வேண்டுமென்பது பெறப்படும்.

இனி, இவ்வேந்தனுக்குப் பிறகு முடிசூட்டப்பெற்ற இவன் புதல்வன் அதிராசேந்திரனுடைய கல்வெட்டுக்களில் இவனது ஆட்சியின் எட்டாம் ஆண்டு' குறிப்பிடப் பெற்றிருத்தலால்

வன் கி. பி. 1070-ஆம் ஆண்டின் முற்பகுதியில் இறந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இவன் தான் இறப்பதற்கு மூன்று ஆண்டுகட்கு முன்னர், கி. பி.1067-ல் தன் புதல்வர்களுள் ஒருவனுக்கு அதிராசேந்திர சோழன் என்னும் அபிடேகப் பெயருடன் இளவரசுப் பட்டம் கட்டியிருந்தனன். இவன் கி. பி. 1070-ன் தொடக்கத்தில் இறந்தவுடன் அவ்வதிராசேந்திர

சோழனே முடிசூட்டப் பெற்றான். வீரராசேந்திரன்

இறந்தவுடன் சோணாட்டில் முடிசூடும் உரிமை பற்றிக் கருத்து வேறுபாடு தோன்றிக் கலகம் உண்டாயினமையின் சளுக்கிய விக்கிர மாதித்தன் விரைந்து வந்து அக் கலகத்தை யடக்கித் தன் மைத்துனனாகிய அதிராசேந்திரனுக்கு முடிசூட்டிச் சென்றான் என்று விக்கிரமாங்க தேவசரிதம் கூறுகின்றது. அதனை அடுத்த அதிகாரத்தில் ஆராய்ந்து உண்மை காண்போம்.

1. Ins. No. 217 of 1912.

2.S. I. I., Vol. III, No. 57; Ibid, Vol, VIII, No.4.