உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




223

15. அதிராசேந்திரசோழன் கி. பி. 1070

1

இவ்வேந்தன் வீரராசேந்திர சோழன் புதல்வன். அவன் கி. பி. 1070-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இறந்த பின்னர், இவன் முடிசூட்டப்பெற்றுச் சோழமண்டலத்தின் ஆட்சியை ஏற்றுக் கொண்டான் என்பது முன் கூறப்பட்டுள்ளது. இவன் தந்தை இராசகேசரி என்னும் பட்டமுடையவனாயிருந் தமையால் அவனுக்குப் பிறகு பட்டம் பெற்ற இம்மன்னன் பரகேசரி என்னும் பட்டம் புனைந்து அரசாண்டனன். முதல் குலோத்துங்க சோழன் முடிசூட்டு விழா சோழ மண்டலத்தில் கி. பி. 1070-ஆம் ஆண்டு சூன் திங்கள் 9-ம் நாள் நடைபெற்றது என்பது அறிஞர்கள் ஆராய்ந்து கண்ட உண்மையாகும். எனவே அதிராசேந்திரன் கி. பி. 1070-ஆம் ஆண்டின் முற்பகுதியில் சில திங்களே ஆட்சி புரிந்தனனாதல் வேண்டும். இராசகேசரி வர்மனாகிய வீரராசேந்திர சோழனுக்கும் இராசகேசரி வர்மனாகிய முதற் குலோத்துங்க சோழனுக்கும் இடை டையில் பரகேசரி வர்மன் என்னும் பட்டமுடைய ஓர் அரசன் சோழநாட்டில் அரசாண்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆகவே, அவ்விரு பெருவேந்தர்க்கும் நடுவில் பரகேசரி வர்மனாகிய நம் அதிராசேந்திரன் ஆட்சி புரிந்துள்ளனன் என்பது தெள்ளிது. விக்கிரமசோழன் உலாவில் அவ்விருவருக்கும் இடையில் ‘அங்க வன்பின்-காவல் புரிந்தவனி காத்தோனும்”

1. Ep. Ind., Vol XXV, Page 246

Ibid, Vol. VII, P.7.

2

-'கூடலார்.

சங்கமத்துக்கு கொள்ளுந் தனிப்பரணிக் கெண்ணிறந்த துங்க மதயானை துணித்தோனும் - அங்கவன்பின்

காவல் புரிந்தவனி காத்தோனு மென்றிவர்கள்.

பூவவய முற்றும் புரந்ததற்பின் - மேவலர்தஞ்

சேலைத் துரந்து சிலையைத் தடிந்திருகாற்

சாலைக் கலமறுத்த தண்டினான் - மேலைக்

கடல் கொண்டு கொங்கணமுங் கன்னடமுங் கைக்கொண்