உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




224

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

என்று ஒரு சோழ மன்னன் குறிப்பிடப்பட்டிருப்பதும் அச்செய்தியை வலியுறுத்துதல் காண்க.

முடி சூடிய சில திங்கள்களில் இவ்வதிராசேந்திர சோழன் ஊழ்வினை வயத்தால் இறக்க நேர்ந்தது என்பது அவ்வாண்டி லேயே சூன் திங்களில் முதற் குலோத்துங்க சோழன் முடி சூட்டப் பெற்றிருத்தலால் நன்கு புலனாகின்றது. எத்துணை ஆற்றலும் வீரமும் படைத்த பெரு வேந்தனாயிருப்பினும் அவன், தன் வினை யொழிந்தால் முடிவெய்துவது ஒருதலை. இந் நிலையில், அதிராசேந்திர சோழன் ஆட்சியை ஏற்றுக்கொண்ட சில திங்கள்களில் இறந்தமைக்குச் சில காரணங்கள் சொல்லப் படுகின்றன. அவற்றையும் ஈண்டாராய்ந்து உண்மை காணுதல் ஏற்புடையதேயாம்.

மேலைச்சளுக்கிய வேந்தனாகிய ஆறாம் விக்கிரமாதித்தன் வரலாறு எழுதிய வடமொழிப் புலவர் பில்ஹணர் என்பார், சோணாட்டில் நிகழ்ந்த உண்ணாட்டுக் கலகத்தில் அதிராசேந்திரன் கொல்லப்பட்டான் கொல்லப்பட்டான் என்று அந்நூலில் கூறியுள்ளனர். அன்றியும் அதிராசேந்திரனுக்கு முடிசூட்டு விழா நிகழ்த்த முயன்றபோது சோழ நாட்டில் பகைஞர்கள் புரிந்த இடையூறுகள் எல்லாவற்றையும் சளுக்கிய விக்கிரமாதித்தனே தன் ஆற்றலால் நீக்கி, இவனுக்குக் கங்கைகொண்ட சோழ புரத்தில் முடிசூட்டிவிட்டுத் தன் நாட்டிற்குச் சென்றனன் என்றும் அவ்வாசிரியர் அந்நூலில் குறிப்பிட்டுள்ளனர். சளுக்கிய விக்கிரமாதித்தனுக்கு வீரராசேந்திரன் புதல்வனாகிய அதிராசேந்திரன் மைத்துனனாதல் பற்றி இவனுடைய முடிசூட்டு விழாவிற்கு அவன் வந்திருத்தல் இயல்பேயாம். வீரராசேந்திரன் தான் இறப்பதற்கு மூன்று ஆண்டுகட்கு முன்னர் கி. பி. 1067-ல் தன் புதல்வனாகிய அதிராசேந்திரனுக்கு இளவரசுப் பட்டங் கட்டி அரசியலில் பயிற்சி பெற்று வருமாறு செய்திருந்தனன் என்பது கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது.

டடல் கொண்ட மாராட் டரசை யடலை

யிறக்கி வடவரையே யெல்லையாத் தொல்லை மறக்கலியுஞ் சுங்கமு மாற்றி - யறத்திகிரி வாரிப்புவனம் வலமாகத் தந்தளிக்கும்

ஆரிற் பொலிதோள் அபயன்' - விக்கிரமசோழன் உலா.