உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

225

ஒவ்வொரு சோழ மன்னனும் தனக்குப் பிறகு பட்டம் பெறவேண்டியவன் யாவன் என்பதைத் தன் நாட்டு மக்களும் அரசியல் அதிகாரிகளாகவுள்ள பல தலைவர்களும் நன்குணர வேண்டி, அவனுக்குத் தன் ஆட்சிக்காலத்திலேயே இளவரசுப் பட்டம் கட்டிவிடுவது அக்காலத்தில் நடைபெற்றுவந்த ஒரு வழக்கமாகும். அவ்வாறே வீரராசேந்திரனும் செய்துள்ள மையால் இளவரசுப் பட்டம் பெற்றிருந்த அதிராசேந்திரனுக்கு முடிசூட்டு வதில் சோழ நாட்டு மக்களும் அரசியல் அதிகாரிகளும் ஒருமனப்பட்டு உவப்புடன் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆகவே, இவனது முடிசூட்டுவிழா உள்நாட்டில் கலகமின்றிச் சிறப்பாக நடைபெற்றிருத்தல் வேண்டும். எனவே, சளுக்கிய விக்கிரமாதித்தன் பகைவர்களை வென்று இவன் முடி சூடுவதற்கு உதவி புரிந்தான் என்று பில்ஹணர் கூறுவது எவ்வாற்றானும் பொருந்துவதன்று. அவர் தம் நூலின் தலைவனும் தம்மைப் பேரன்புடன் ஆதரித்துக் கொண்டிருந்தவனும் ஆகிய விக்கிரமாதித்தனைச் சிறப்பிக்க வேண்டியே அச்செய்தியைப் புனைந்துரையாகக் கூறியிருத்தல் வேண்டும். அதுபோலவே, அதிராசேந்திரன் சோழநாட்டில் நிகழ்ந்த கலகத்தில் சில தினங்களுக்குள் கொல்லப்பட்டான் என்றும், மிகச் சேய்மையி லிருந்த விக்கிரமாதித்தன் தக்க சமயத்திற் சென்று தன் மைத்துனனுக்கு உதவி புரிய முடியவில்லை என்றும் அவர் தம் நூலில் சொல்லியிருப்பது ஏற்றுக்கொள்ளற்பாலதன்று. அதிராசேந்திரன் ஆட்சியில் சோழ மண்டலம் மிக அமைதியாக இருந்தது என்பது இவன் காலத்துக் கல்வெட்டுக்களால் புலனா கின்றது. ‘திருமடந்தையும் சயமடந்தையும் திருப்புயங்களில் இனி திருப்ப" எனவும், 'திங்களேர் மலர்ந்து வெண்குடை மண்டிலம்" எனவும் தொடங்கும் இவன் மெய்க்கீர்த்திகள் இரண்டும் இவ்வாறே இவ்வேந்தனை ‘வீரமுந் தியாகமும் ஆரமெனப் புனைந்து மாப்புகழ் மனுவுடன் வளர்த்த கோப்பர கேசரி வர்மரான உடையார் ஸ்ரீ அதிராசேந்திர தேவர்' என்று கூறுகின்றமையால் இவன் மக்களால் பெரிதும் போற்றப்

1. S.I.I., Vol. VII Nos, 884 and 442

2. Ibid, Vol. IV, Nos, 1388 and 1392