உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




226

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

பட்டுப் பெரும் புகழுடன் வாழ்ந்து வந்தனனாதல் வேண்டும். இவன் கல்வெட்டுக்கள் செங்கற்பட்டு, வட ஆர்க்காடு, தென்னார்க்காடு, தஞ்சாவூர் ஆகிய ஜில்லாக்களிலும் ஈழ மண்டலத்திலும் காணப்படுகின்றன. இவனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டில் அரசாங்க அதிகாரிகளுள் ஒருவனும் படைத்தலைவன் ஒருவனும் காஞ்சிபுரத்தில் திருமயான முடையார் கோயிலிலுள்ள கங்கைகொண்டான் மண்டபத்தி லிருந்து, திருவல்லம், திருக்காரைக்காடு முதலான ஊர் களிலுள்ள கோயில்களின் கணக்குகளை ஆராய்ந்து அக்கோயில் களுக்குச் சில புதிய நிவந்தங்கள் அளித்தமை அவ்வூர்களிலுள்ள கல்வெட்டுக் களால் அறியக் கிடக்கின்றது.' இவ்வேந்தன், கி.பி.1070-ஆம் ஆண்டில் கங்கைகொண்ட சோழபுரத்தில் தன் அரண்மனையில் இருந்து கொண்டு, தொண்டை நாட்டுத் தலங்களுள் ஒன்றாகிய திருப்பாசூர்க் கோயிலுக்குரிய தேவதான மாகிய சேலை என்னும் ஊரை இறையிலியாக்கிய செய்தி அக்கோயிலில் வரையப் பெற்றுள்ளது. அதில் இம்மன்னனுடைய உடன் கூட்டத்ததி காரிகளும் மற்ற அரசியல் தலைவர்களும் கையெழுத் திட்டுள்ளனர்.' இவற்றையும் இவைபோன்ற இவனுடைய பிற கல்வெட்டுக்களையும் ஆராய்ந்து பார்க்கு மிடத்து, இவன் ஆட்சியில் அரசாங்க அலுவல்கள் எல்லாம் மிக்க அமைதியாகவே நடைபெற்று வந்தன என்பதும் படைத் தலைவர்களும் மற்ற அரசியல் அதிகாரிகளும் இவன்பால் பேரன்புடன் ஒழுகி வந்தனர் என்பதும் வெளியாகின்றன. எனவே, பில்ஹணர் கூறியுள்ளவாறு உள்நாட்டில் குழப்பமும் அமைதியின்மையும் ஏற்பட்டமைக்குச் சிறிதும் ஆதாரமின்மை காண்க. ஆகவே, சோழ நாட்டில் நிகழ்ந்த குழப்பத்தில் அதிராசேந்திரன் கொல்லப்பட்டான் என்று அவர் கூறியிருப்பது உண்மையன்று என்பது உணரற்பாலதாகும்.

சோழ மண்டலத்திற்கு வடக்கே பன்னூறு மைல் களுக்கப் பாலுள்ள கல்யாணபுரத்திலிருந்த பில்ஹணர், சோணாட்டு

1. S.I.I., Vol. III, No.57.

Ibid Vol. VIII, No.4.

2. Ins.113 of 1930