உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

227

நிகழ்ச்சிகளை உண்மையாக உணர்ந்து கோடற்குத் தக்க வாய்ப்பும் அக்காலத்தில் இல்லை. யாண்டும் நிகழும் அரிய நிகழ்ச்சிகளையும் அரசாங்கச் செய்திகளையும் அறிதற்குத்தக்க கருவிகள் கிடைக்கின்ற இந்நாட்களில் கூட உண்மைக்கு மாறான பல செய்திகள் வெளிவந்து பரவுகின்றன. இத்தகைய கருவிகளுள் ஒன்றுமில்லாத பதினொன்றாம் நூற்றாண்டில் தமிழ் வழங்காத வடநாட்டிலிருந்த வடமொழிப் புலவர் ஒருவர் சோழ நாட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சியொன்றை எங்ஙனம் உண்மையாக உணர்ந்து கூறமுடியும்?

இனி, தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள கூகூரில் காணப்படும் கல்வெட்டொன்று அதிராசேந்திரன் தன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டில் கொடிய நோய்வாய்ப்பட்டுத் துன்புற்றான் என்றும் இவன் உடல் நலம் பெறும் பொருட்டு அவ்வூர்க் கோயிலில் இறைவன் திருமுன்னர் நாள்தோறும் தேவாரப் பதிகங்கள் இருமுறை ஓதப்பெற்று வந்தன என்றும் கூறுகின்றது.' வனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டு இருநூறாம் நாளுக்குப் பிறகு இவன் கல்வெட்டுக்கள் யாண்டும் காணப்படவில்லை. எனவே, நோய் வாய்ப்பட்டிருந்த இவ்வேந்தன் நலமுறாமல் அந்நாட் களில் உயிர்துறந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆகவே இவன் உள்நாட்டுக் கலகத்தில் கொல்லப்பட்டான் என்பது பொருந்தாமை காண்க.

இனி, ஒரு சோழமன்னன் தில்லைமாநகரில் சித்திர கூடத்திலிருந்த திருமால் மூர்த்தத்தைப் பெயர்த்துக் கடலில் எறிந்தமையோடு வைணவர்களையுந் துன்புறுத்தினான் என்றும் அதுபற்றி வைணவ ஆசாரியராகிய இராமாநுசர் தமிழ் நாட்டைத் துறந்து மைசூர் நாட்டிற்குப் போய்த் தங்கநேர்ந்தது என்றும் அந்நாட்களில் அவர் செய்த மாரண மந்திரத்தினால் அவ்வரசன் இறந்தனன் என்றும் வைணவர் அவனையே கிருமிகண்ட சோழன் என்பர் என்றும் திவ்யசூரி சரிதம், யதிராசவைபவம், இராமாநுசாசார்ய திவ்ய சரிதை ஆகிய வைணவ நூல்கள்å

1. Ins. 280 of 1917

2. S.I.I Vol. III No. 57

3. திவ்ய சூரிசரிதம், பக்கங்கள் 216 – 218