உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




230

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

இவன் கல்வெட்டுக்கள் மிகுதியாகக் காணப்படவில்லை. அதற்குக் காரணம், இவன் சில திங்கள்கள் மாத்திரம் ஆட்சி புரிந்துள்ளமையேயாகும். வட ஆர்க்காடு ஜில்லாவிலுள்ள திருவல்லத்தில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில்தான் இவன் பட்டத்தரசியைப் பற்றிய குறிப்பு உளது. அஃது அவ்வரசியின் சிறப்புப் பெயர் உலக முழுதுடையாள் என்று உணர்த்துகின்றது. அவ்வரசியைப் பற்றிய பிற செய்திகள் தெரியவில்லை.

இனி, இவ்வரசன் ஆட்சிக்காலத்தில் நிலவிய அரசியல் தலைவர்களுள் சிலர் இவன் கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்றிருக்கின்றனர். அன்னோரைப் பற்றிய சில செய்திகளை அடியிற் காண்க.

1. ஆதித்த தேவனான இராசராசேந்திர மூவேந்த வேளான்:' இவன் அதிராசேந்திரன் அரசியல் அதிகாரிகளுள் ஒருவன்; காஞ்சிபுரத்தில் திருமயானமுடையார் கோயிலிலுள்ள கங்கை கொண்டான் மண்டபத்திலிருந்து திருவல்லம், திருக்காரைக்காடு ஆகிய ஊர்களிலிலுள்ள கோயில்களின் கணக்குகளை இவன் ஆராய்ந்தனன் என்று காஞ்சிக் கல்வெட் டொன்று கூறுகின்றது. எனவே, இவன் அரசன் ஆணையின்படி அறநிலையங்களை ஆராய்ந்து கண்காணித்து வந்தமையோடு சில கோயில்களில் புதிய நிவந்தங்கள் அமைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

2. சேனாபதி இராசராசன் பரநிருப இராக்கதனான வீரசோழ இளங்கோ வேளான்': இவன் சோழ நாட்டில் திருவிடை மருதூருக்குத் தெற்கேயுள்ள நடார் என்னும் ஊரில் வாழ்ந்த ஒரு தலைவன்; அதிராசேந்திர சோழனுடைய படைத் தலைவர்களுள் ஒருவன்; அரசனால் அளிக்கப்பெற்ற பரநிருப இராக்கதன், வீரசோழ இளங்கோ வேள் என்னும் பட்டங் களையுடையவன். காஞ்சி மாநகரிலிருந்து கோயில் கணக்கு களை ஆராய்ந்த அதிகாரிகளுள் இவனும் ஒருவன்.4

1. S.I.I. Vol. III, No. 57

2. Ibid, Vol VIII, No.4

3. Ibid. Vol. III No.57

4.

S, II.,Vol VIII, No.4