உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

231

3. இராசராசன் சயங்கொண்ட சோழனான சேனாபதி இருக்குவேள்: இவன் அதிராசேந்திரன் காலத்திலிருந்த ஒரு

1

த்தலைவன்; தென்னார்க்காடு ஜில்லாவைச் சேர்ந்த புறவார் பனங்காட்டூர் என்னுந் திருப்பதியில் சிவதர்ம மடம் என்ற மடம் ஒன்றமைத்து இதில் அவ்வூர்க்கு வரும் ம் சிவனடியார்கட்கு உணவளிக்குமாறு இறையிலியாக நிலம் வழங்கியவன். இவன் இருக்குவேள் என்னும் பட்டமுடையவ னாயிருத்தலால், ஒருகால் கொடும்பாளூர்க் குறுநிலமன்னனாக இருத்தல் கூடும். அதிராசேந்திரன் ஆட்சிக் காலத்தில் இவன் முதுமை எய்தியிருத்தல் வேண்டும். சைவ சமயத்தும் சிவனடியா ரிடத்தும் இவன் கொண்டிருந்த அன்பு மிகவும் பாராட்டத் தக்கது.

இனி அதிராசேந்திரனுக்குப் புதல்வன் இல்லாமையாலும் சோழ நாட்டில் முடிசூட்டப்பெறுவதற்குரிய வேறு சோழ அரசகுமாரன் ஒருவனும் அத்தொல் பெருங்குடியில் இன்மை யாலும் புகழும் பெருமையும் வாய்ந்த விசயாலய சோழன் காலம் முதல் சோழ நாட்டில் தொடர்ந்து ஆட்சிபுரிந்து வந்த பண்டைச் சோழ மன்னர் மரபு கி. பி. 1070-ஆம் ஆண்டில் இவ்வதிராசேந்திர சோழனோடு முடிவெய்தியது எனலாம். இவனுக்குப் பிறகு பட்டம் பெற்ற முதற் குலோத்துங்க சோழன், தந்தை வழியில் கீழைச்சளுக்கியர் மரபையும் தாய் வழியில் சோழர் மரபையும் சேர்ந்தவன் ஆவன். குலோத்துங்கனுக்குச் சோழ ராச்சியம் எவ்வாறு கிடைத்த தென்பதை அடுத்த அதிகாரத்தில் காண்க.

1. Ibid. No. 754