உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




232

சேர்க்கை

-

1

சோழ மன்னர்களின் மெய்க்கீர்த்திகள்

மெய்க்கீர்த்தி என்பது பேரரசனது மெய்ப்புகழையும் வரலாற்றையும் எடுத்துரைத்து, அவன் தன் மாதேவியருடன் நீடு வாழ்க என வாழ்த்தி, அம்மன்னன் இயற்பெயரோடு சிறப்புப் பெயர்களையும் ஆட்சியாண்டினையும் கூறும் செய்யுளாகும். இதனைச் சீர்மெய்க்கீர்த்தி என்றும் வழங்குவர். இலக்கணத்தை,

'சீர்நான் காகி யிரண்டடித் தொடையாய்

வேந்தன் மெய்ப்புக ழெல்லாஞ் சொல்லியும் அந்தத் தவன்வர லாறு சொல்லியும் அவளுடன் வாழ்கெனச் சொல்லியு மற்றவன் இயற்பெயர்ப் பின்னர்ச் சிறக்க யாண்டெனத் திறப்பட வுரைப்பது சீர்மெய்க் கீர்த்தி'

தன்

என்னும் பன்னிருபாட்டியல் சூத்திரத்தால் நன்குணரலாம். அன்றியும், வச்சணந்திமாலை வெண்பாப் பாட்டியலின் ஆசிரியராகிய குணவீர பண்டிதர் என்பார், 'தொழிலார்ந்த மெய்க்கீர்த்தி சொற்சீரடியால் எழிலரசர் செய்தி இசைப்பர்' என்று கூறியிருத்தல் அறியத்தக்கது. இது பெரும்பான்மை அகவ லோசையும் சிறுபான்மை கலியோசையும் கொண்டு அமைந் துள்ளது. இத்தகைய மெய்க்கீர்த்தியைக் கல்வெட்டுக்களின் தொடக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை முதலில் உண்டு பண்ணியவன் பெருவேந்தனாகிய முதல் இராசராச சோழனே யாவான். அவனுக்குப் பிறகு அவன் வழிவந்த சோழ மன்னர் களும் பாண்டி வேந்தர்களும் அச்சிறந்த செயலைத் தாமும் மேற்கொண்டு ஒழுகுவாராயினர். பேரரசர்களாக விளங்கிய தமிழ் வேந்தர்களின் கல்வெட்டுக்களில்தான் மெய்க்கீர்த்தி