உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

மினையன பிறவு முனைவயிற் கொண்டு விசையா பிடேகம் செய்துதென் றிசைவயிற் போர்ப்படை நடாத்திக் கார்க்கட லிலங்கையில் விறற்படைக் கலிங்கர்மன் விரசலா மேகனைக் கடகளிற் றொடுபடக் கதிர்முடி கடிவித் திலங்கையர்க் கிறைவன் மானா பரணன்

காதல ரிருவரைக் களத்திடைப் பிடித்து

மாப்பெரும் புகழ் மிகவளர்த்த கோப்பரகேசரி வர்மரான உடையார் ஸ்ரீராசேந்திர தேவர்க்கு யாண்டு.

இராச மகேந்திர சோழன்

திருமகள் விளங்க விருநில மடந்தையை

ஒருகுடை நிழற்கீ ழினிதுறப் புணர்ந்து

தருமநெறி நிற்ப மனுநெறி நடாத்திய

உடையார் ஸ்ரீராசமகேந்திர தேவர்க்கு யாண்டு.

வீரராசேந்திர சோழன்

I

திருவளர் திரள்புயத் திருநில வலயந் தன்மணிப் பூணெனத் தயங்கப் பன்மணிக்

கொற்றவெண் குடைநிழற் குவலயத் துயிர்களைப்

பெற்ற தாயினும் பேணி மற்றுள

அறைகழ லரையர்தன் னடிநிழ லொதுங்க

உறைபிலத் துடைகலி யொதுங்க முறைசெய்து

விரைமலர்த் தெரியல் விக்கலன் றன்னோடு

வரிசிலைத் தடக்கை மாசா மந்தரைக்

கங்கபாடிக் களத்திடை நின்றுந்

துங்கபத் திரைபுகத் துரத்தி யங்கவர்

வேங்கைநன் னாட்டிடை மீட்டுமவர் விட்ட

தாங்கரும் பெருவலித் தண்டுகெடத் தாக்கி

மாதண்ட நாயகன் சாமுண்ட ராயனைச் செற்றவன் சிரத்தினை யறுத்து மற்றவ னொருமக ளாகிய விருகையன் றேவி நாகலை யென்னுந் தோகையஞ் சாயலை

முகத்தொடு மூக்குவே றாக்கிப் பகைத்தெதிர்

245