உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




260

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -3

'நாமே வெழுத்துச்சொ னற்பொருள் யாப்பலங் காரமெனு பாமேவு பஞ்ச வதிகார மாம்பரப் பைச்சுருக்கித் தேமே வியதொங்கற் றேர்வீர சோழன் றிருப்பெயராற் பூமே லுரைப்பன் வடநூன் மரபும் புகன்றுகொண்டே.

6

2ஆவி யனைத்துங் கசத நபமவ் வரியும் வல்வில் ஏவிய வெட்டும் யவ்வாறிஞந் நான்கு மெல்லாவுலகு மேவிய வெண்குடைச் செம்பியன் வீரரா சேந்திரன்றன் நாவியல் செந்தமிழ்ச் சொல்லின் மொழிமுத னன்னுதலே. 7

இப்பாடலிலுள்ள மிழலைக் கூற்றம் என்பது 'மாலைக்கூற்றம்' எனவும் 'வீரன்' என்பது 'மாறன் எனவும் வீரசோழிய அச்சுப் பிரதியில் காணப்படுகின்றன. மிழலைச் கூற்றத்துக்கீழ் கூற்றுப் பொன்பற்றி உடையான்' என்ற கல்வெட்டுத் தொடரும் தேர் வீரசோழன் திருப்பெயரால் - பூமேலுரைப்பன்' என்ற வீரசோழியப் பாயிரப்பாடற் பகுதியும் மேற்கண்டவாறு திருத்துவதற்குப் பெரிதும் துணையாயிருத்தல் காண்க. S.II.Vol,IV. No.372, வரிகள் 103, 104 வீரசோழியப் பாயிரம், பா3.

1. வீராசோ. பாயிரம் 3.

2. மேற்படி சந்தி. 7.