உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

CO

2. கடைச் சங்கத்திறுதிக் காலத்திற்கும் பிற்காலச் சோழர் ஆட்சியின் தொடக்கத் இடைப்பட்ட சோழர் நிலை

மதுரை மாநகரில் நிலவிய கடைச்சங்கம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் முடிவெய்தியது என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து நிறுவியுள்ள உண்மையாகும்.' எனவே, புறநானூறு, அகநானூறு, பத்துப் பாட்டு முதலான கடைச்சங்க நூல்களில் சொல்லப்பட்டுள்ள சோழ மன்னர்கள் கி. பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன் சோழ மண்டலத்தில் ஆட்சிபுரிந்த முடியுடைவேந்தர் ஆவர். அவர்கள் காந்தமன், தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன், உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி, கரிகாலன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், நலங்கிள்ளி, மாவளத்தான், போரவைக் கோப் பெரு நற்கிள்ளி, வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி, நெடுங்கிள்ளி, இராசசூயம் வேட்டபெருநற்கிள்ளி, செங்கணான், நல்லடி' என்போர். அன்னோர் வரலாறுகளும் மிகச் சுருக்கமாகவே சங்க நூல்களில் காணப்படுகின்றன. கடைச்சங்கத்திறுதிக் காலத்திற்குப் பிறகு கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் தஞ்சை மாநகரைக் கைப்பற்றி அரசாளத் தொடங்கிய சோழன் விசயாலயன் காலம் வரையில் சோழரின் செய்திகள் நன்கு புலப்படவில்லை. இவ்விடைக்காலப் பகுதியில் சோழ அரசர்கள் தாழ்ந்த நிலையை எய்திச் சோழ நாட்டில் ஒரு சிறு பகுதியைத் தமக்குரியதாகக் கொண்டு குறுநில மன்னராய்ப் பிறவேந்தர்க்கு அடங்கி வாழ்ந்து வந்தனராதல்வேண்டும். அக்காலத்தில் வெளிவந்துள்ள செப்பேடுகளும், கல்வெட்டுக்களும், தமிழ் 1. 'ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முந்திய தமிழர்'என்ற ஆங்கில நூலால் இதனையறியலாம். செந்தமிழ்த் தொகுதி 15, பக், 3 - 24 தொகுதி 17 பக். 185- 208.

C

2. இவன் செங்கணான் மகன் என்பது அன்பிற் செப்பேடுகளால் அறியப்படுகிறது. (Epi.Ind. Vol. 15, No.5) அகநானூற்றிலுள்ள 356 - ம் பாடலில் இவன் கூறப்பட்டிருத்தல் காண்க.