உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

7

நூல்களும் இவர்கள் சோழ நாட்டில் இருந்தனரென்ற அளவில் உணர்த்துகின்றனவேயன்றி இவர்களது பிற செய்திகளைக் கூறவில்லை. இதற்குக் காரணம், இவர்கள் தம் பெருமை யிழந்து தாழ்ந்த நிலையிலிருந்தமையேயாம்.

இனி, அக்காலப் பகுதியில் நிகழ்ந்தவற்றை ஆராய்ந்து இவர்கள் நிலையை இயன்றவரையில் உணர்ந்துகொள்வதும் இன்றியமையாத தாகும். கி. பி. நான்கு ஐந்தாம் நூற்றாண்டு களில் நம் தமிழகம் களப்பிரர் என்ற ஒருவகையாரது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்பது பல ஆதாரங்களால் அறியக்கிடக் கின்றது'. பாண்டி நாடு களப்பிரரால் கைப்பற்றப்பட்டிருந்த செய்தி வேள்விக்குடிச் செப்பேடுகளாலும் புலனாகின்றது". அந்நாட்களில் தான் சோழரும் தம் நாட்டைக் களப்பிரரிடம் இழந்திருத்தல் வேண்டும் என்பது ஒரு தலை. முதலில், பாண்டியர் தாம் இழந்த நாட்டை மீண்டும் கைப்பற்றித் தமிழகத்தின் தென்பகுதியில் தம் பேரரசை நிறுவி அதனை உயர்நிலைக்குக் கொணர்ந்து ஆட்சிபுரிந்து வருவாராயினர். சோழ நாட்டைக் களப்பிரரிடமிருந்து கைப்பற்றிய பல்லவர், தமிழகத்தின் கீழ்ப்பகுதிக்குப் பேரரசராய் விளங்குவாராயினர். இந்நிலையில் சோழர் தம் நாட்டைக் கைப்பற்றித் தமக்குரிய தாகக் கொண்டு ஆட்சி நடத்துவதற்குத் தக்க காலமும் துணை வலியும் அமையாமையால் காலங்கருதி அடங்கி வாழ்ந்து வந்தனர். எனவே, அந்நாட்களில் இவர்கள் பல்லவர்க்குத் திறை செலுத்தும் குறுநில மன்னராயிருந்தனர் என்பது தேற்றம்.

சோழர் அந்நிலையிலிருந்த நாட்களில் பண்டைத் தலைநகரங் களாகிய உறையூர், காவிரிப்பூம்பட்டினம் என்பவற்றில் தங்கி வாழ்ந்துவந்தனர் என்பதற்குத் தக்க சான்றுகள் இல்லை. ஆகவே, இவர்கள் வேறு ஒரு நகரத்தில்தான் இருந்திருத்தல் வேண்டும். வரலாற்று ஆராய்ச்சியாளருள் சிலர், கோனாட்டின் தலைநகராகிய கொடும்பாளூரில் அந்நாட்களில் இவர்கள் தங்கியிருந்தனர் என்று கூறுகின்றனர்; மற்றுஞ் சிலர் இவர்கள் உறையூர்ப் பக்கத்தில் 1. The Cholas Vol. I, pp 119 -121; பாண்டியர் வரலாறு - பக் 21, 22.

2. Epigraphia Indica, Vol. XVII, No. 16.

3. Kasakudi Plates of Nandivarman Pallavamalla - South Indian Inscriptions, Vol. II. No. 73.