உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

இருந்திருத்தல்வேண்டும் என்கின்றனர்'. இவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. கோனாடு என்பது புதுக்கோட்டை இராச்சியத்தில் முற்காலத்திலிருந்த ஒரு நிலப்பரப்பாகும். அது, சோழ மண்டலத்திற்கும் பாண்டி மண்டலத்திற்கும் இடையில் அமைந்திருந்த ஒரு சிறு நாடு எனலாம். அந்நாட்டிலிருந்த கொடும்பாளூரில் இருக்குவேள் என்ற குடியினர் இருந்தனர் என்பதும் அவர்கள் சிலகாலம் பாண்டியர்க்கும் சிலகாலம் பல்லவர்க்கும் அடங்கித் திறை செலுத்திக் கொண்டு குறுநில மன்னராயிருந்து வந்தனர் என்பதும் சில கல்வெட்டுக்களால் புலப்படுகின்றன. அவர்கள் கடைச்சங்க நாளில் வாழ்ந்த இருங்கோவேளின் வழியினர்; சோழ மரபினர் அல்லர். எனவே, காடும்பாளூரில் இருவேறு குறுநில மன்னர் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தனர் என்று கொள்வது எவ்வாற்றானும் ஏற்புடையதன்று. ஆகவே, சோழர் குறுநில மன்னராயிருந்த காலத்தில் கொடும்பாளூரில் இருந்திலர் என்பது திண்ணம்.

இனி, சைவ சமய குரவருள் ஒருவராகிய திருநாவுக்கரசு அடிகள், சோழ நாட்டில் பழையாறை வடதளியில் இறைவனை வணங்குவதற்குச் சென்றபோது அக்கோயிலில் சிவலிங்கப் பெருமானை அமண் சமயத்தினர் மறைத்து வைக்கவே, அடிகள் உள்ளம் வருந்தினாராக, அதனை யுணர்ந்த அவ்வூரிலிருந்த வேந்தன், அடிகளது இன்னலைப்போக்கி வடதளிப் பெருமானை வழிபடச் செய்து, சிறந்த விமானம் ஒன்றும் எடுப்பித்து, நாள் வழிபாட்டிற்கு நிவந்தங்களும் அளித்தனன் என்று திருத்தொண்டர் புராணமாகிய பெரியபுராணம் கூறுகின்றது. இதில் குறிப்பிடப் பெற்ற அரசன், அடிகள் காலமாகிய கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழநாட்டின் பழையாறை" என்னுந் தொன்னகரில் தங்கி வாழ்ந்துகொண்டிருந்த சோழர் மரபினனாகிய ஒரு குறுநில மன்னன் என்பதில் ஐயமில்லை. அந்நகரம் மிகப் பழமை 1. The Cholas, Vol. II, p. 131.

2. Annual Report on South Indian Epigraphy for 1927, part II, para 73. In- scriptions of the Pudukkottai State No.14.

3. பெரிய புராணம், திருநாவுக்கரசு நாயனார் புராணம் - பாடல்கள், 294 - 299.

4. பழையாறைநகர் இந்நாளில் ஒரு சிற்றூராகக் கும்பகோணத்திற்குத் தென்மேற்கே உளது. அது முற்காலத்தில் 5 மைல் நீளமும் 2 மைல் அகலமுமுள்ள பெரு நகராயிருந்தது.